ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் விருது சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்

First Published Jan 31, 2023, 11:44 AM IST

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை 4 முறை வென்ற ஸ்டீவ் ஸ்மித், ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகிய லெஜண்ட் கிரிக்கெட் வீரர்களின் சாதனையை சமன் செய்துள்ளார்.
 

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கிரிக்கெட் ஆடிய ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தும் ஊக்குவித்தும் வருகிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 2022ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று சிட்னியில் நடந்தது. 

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை ஸ்டீவ் ஸ்மித் வென்றார். சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை உஸ்மான் கவாஜாவும், சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதை டேவிட் வார்னரும், சிறந்த டி20 வீரருக்கான விருதை மார்கஸ் ஸ்டோய்னிஸும் வென்றனர்.

நீ ஒண்ணும் உம்ரான் மாலிக்கோ, முகமது சிராஜோ இல்ல.. அதனால் இதையாவது செய்..! அர்ஷ்தீப் சிங்கிற்கு கம்பீர் அறிவுரை

சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை 4வது முறையாக ஸ்டீவ் ஸ்மித் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக, 2015, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை வென்றிருந்த ஸ்மித், இப்போது 4வது முறையாக வென்று, ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகிய இருவரும் 4 முறை ஆலன் பார்டர் விருதை வென்றுள்ளனர். 2004, 2006, 2007 மற்றும் 2009 ஆகிய 4 ஆண்டுகளுக்கான சிறந்த ஆஸ்திரேலிய வீரருக்கான ஆலன் பார்டர் விருதை வென்றுள்ளார் பாண்டிங்.

இந்த வயசுலயும் ஃபிட்னெஸில் 25 வயது வீரர் என்கிட்ட நிற்க முடியாது..! ஓய்வு பெறும் ஐடியாவே இல்ல - ஷோயப் மாலிக்

2005, 2009, 2012, 2013 ஆகிய 4 ஆண்டுகளும் சிறந்த வீரருக்கான விருதை வென்றிருக்கிறார் மைக்கேல் கிளார்க். பாண்டிங் மற்றும் கிளார்க்கின் சாதனையை சமன் செய்துள்ள ஸ்மித், இன்னும் ஒருமுறை இந்த விருதை வென்றால் அவர்களது சாதனையை முறியடித்து இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துவிடுவார்.

click me!