நீ ஒண்ணும் உம்ரான் மாலிக்கோ, முகமது சிராஜோ இல்ல.. அதனால் இதையாவது செய்..! அர்ஷ்தீப் சிங்கிற்கு கம்பீர் அறிவுரை

சர்வதேச கிரிக்கெட்டில் நோ பால்கள் அதிகமாக வீசி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள அர்ஷ்தீப் சிங்கிற்கு கௌதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.
 

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பும்ராவின் வருகைக்கு பிறகு வலுவடைந்துள்ளது. பும்ரா, ஷமி ஆகிய சீனியர் பவுலர்கள் தவிர, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷிவம் மாவி என இந்திய அணியின் அடுத்த தலைமுறை ஃபாஸ்ட் பவுலர்கள் மிரட்டுகின்றனர்.
 

இந்த இளம் பவுலர்களில் முக்கியமானவர் அர்ஷ்தீப் சிங். இடது கை ஃபாஸ்ட் பவுலர் என்பதால் இவருக்கு மற்ற இளம் வீரர்களை விட அணியில் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கிடைக்கிறது. அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. துல்லியமான யார்க்கர் மற்றும் வேரியேஷன் காரணமாக இவரும் பும்ராவை போல சிறந்த டெத் பவுலராக பயன்படுத்தப்பட்டுவருகிறார்.

2022ம் ஆண்டுக்கான கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகளை வென்ற வீரர்கள்.! முழு பட்டியல்
 


ஆனால் அண்மைக்காலமாக அவர் அதிகமான நோ பால்களை வீசுவது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் நோ பால்கள் வீசி மோசமான சாதனையை படைத்தார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 19 ஓவர் வரை ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 27 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவர் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகிவிட்டது. அந்த ஓவரின் முதல் பந்தை நோ பாலாக வீசினார் அர்ஷ்தீப் சிங். அதில் சிக்ஸர் அடித்த டேரைல் மிட்செல், அதற்கு வீசப்பட்ட ரீபாலிலும் சிக்ஸர் அடித்தார். எனவே அந்த ஒரு பந்தில் 13 ரன்கள் அந்த அணிக்கு கிடைத்தது. ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அர்ஷ்தீப் சிங் நோ பால் வீசுவது இந்திய அணிக்கு கவலையளிக்கிறது.

இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், இவ்வளவு அதிகமான நோ பால்களை ஒரு பவுலர் வீசக்கூடாது. இந்த லெவலில் நோ பால்கள் வீசுவதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு பவுலராக அவரை பாதிப்பது மட்டுமல்லாது, ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் அணிக்கும் பெரிய பாதிப்பாக அமையும். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதுதான் நடந்தது. உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஸ்விங்கும் பவுன்ஸும் இருக்கும். அதனால் புதிய பந்தில் ஏதாவது நடக்கும். ஆனால் இந்திய ஆடுகளங்கள் ஃபிளாட்டாக இருக்கும். 

இந்த வயசுலயும் ஃபிட்னெஸில் 25 வயது வீரர் என்கிட்ட நிற்க முடியாது..! ஓய்வு பெறும் ஐடியாவே இல்ல - ஷோயப் மாலிக்

அதனால் பவுலர்கள் தான் வித்தியாசமாக எதையாவது முயற்சிக்க வேண்டும். ஸ்லோ டெலிவரி அல்லது ஸ்லோ பவுன்ஸர் என வேரியேஷன் காட்ட வேண்டும். பேட்ஸ்மேனை அச்சுறுத்தும் அளவிற்கான வேகம் அர்ஷ்தீப் சிங்கின் பவுலிங்கில் இல்லை. அதனால் அவர் வேரியேஷனில் கவனம் செலுத்த வேண்டும். பேட்ஸ்மேனை மிரட்டும் வேகத்தில் வீசுவதற்கு, அர்ஷ்தீப் ஒன்றும் உம்ரான் மாலிக்கோ அல்லது முகமது சிராஜோ இல்லை. எனவே நோ பால் வீசுவதை தவிர்த்து வேரியேஷன் காட்ட வேண்டும் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

Latest Videos

click me!