
வாஷிங்டன் சுந்தர் கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். அவரது புனைப்பெயர் வாஷி. வாஷிங்டன் சுந்தரின் பெற்றோர் எம் சுந்தர்.
வாஷிங்டன் சுந்தர் அவுட்டிற்கு நான் தான் காரணம்: தவறை ஒப்புக் கொண்ட சூர்யகுமார் யாதவ்!
இவர், தனது மூத்த மகனான சுந்தரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக இருந்த பி.டி. வாஷிங்டன் என்பவரின் ஞாபகமாக தனது இளைய மகனான சுந்தருக்கு வாஷிங்டன் சுந்தர் என்று பெயர் வைத்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தரின் சகோதரி ஷைலஜா சுந்தரும் தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனை. வாஷிங்டன் சுந்தர் தனது 4 வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் முறையாக 2016 - 17 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணியில் இடம் பெற்றிருந்தார். பேட்டிங் வீரரான வாஷிங்டன் சுந்தர் தன்னை ஒரு ஆஃப் ஸ்பின்னராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அண்டர் 19 இந்திய ஆண்கள் அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணியில் இடம் பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் திரிபுரா அணிக்கு எதிரான முதல் முறையாக தனது முதல் சதத்தை அடித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி புனே அணியில் அறிமுகமானார்.
அந்த சீசனின் தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாஷிங்டன் சுந்தரை ரூ.8.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதே போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
தனது 18ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்தார். விராட் கோலி கூட தனது இளம் வயதில் கிரிக்கெட்டில் இணையவில்லை. ஆனால், சச்சின் டெண்டுல்கர், பார்த்திவ் படேல், ஹர்பஜன் சிங் ஆகியோர் கூட இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்த 7ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை வாஷிங்டன் சுந்தர் படைத்தார்.
வாஷிங்டன் சுந்தர் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் இருந்துள்ளார். ஆனால், அவரது தந்தை அவரை லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், மீடியம் ஸ்பேஸ், விக்கெட் கீப்பர் என்று பல திறமைகளை கற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்படியே 6ஆவது படிக்கும் போது செய்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தரின் தந்தை கூட கிரிக்கெட்டர் தான். ஆனால், அவரால் ரஞ்சி டிராபியில் விளையாட முடியவில்லை. அவரது கனவை அவரது மகன் வாஷிங்டன் சுந்தர் நிறைவேற்றியுள்ளார்.