MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs NZ: தொடரின் முடிவை தீர்மானிக்கும் 3வது டி20 இந்திய அணியில் 2 மாற்றங்கள்! அதிரடி வீரருக்கு அணியில் இடம்

IND vs NZ: தொடரின் முடிவை தீர்மானிக்கும் 3வது டி20 இந்திய அணியில் 2 மாற்றங்கள்! அதிரடி வீரருக்கு அணியில் இடம்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

2 Min read
Author : karthikeyan V
| Updated : Jan 31 2023, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை(பிப்ரவரி 1) நடக்கிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி தான் தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பி களமிறங்குகின்றன. தொடரின் முடிவை தீர்மானிக்கும் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் விருது சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்
 

36

இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரருக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்ட ஷுப்மன் கில்லின் டி20 ஸ்டிரைக் ரேட் எப்போதுமே கேள்விக்குறியாக இருந்துவந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடும் கில், டி20 கிரிக்கெட்டில் அந்தளவிற்கு சோபிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து, நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் ஷுப்மன் கில்லை புறக்கணிக்க முடியாது என்பதால் டி20 தொடரிலும் அவர் களமிறக்கப்பட்டார்.
 

46

ஆனால் முதலிரண்டு போட்டிகளிலுமே ஷுப்மன் கில் சோபிக்கவில்லை.  அதேவேளையில், அதிரடியாக ஆடக்கூடிய மிகத்திறமையான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா பென்ச்சில் இருக்கிறார். முதல் போட்டியிலேயே அவரை ஆடவைக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எனவே ஷுப்மன் கில்லுக்கு பதிலாக இந்த போட்டியில் பிரித்வி ஷா களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

56

மேலும், ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டு ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

நீ ஒண்ணும் உம்ரான் மாலிக்கோ, முகமது சிராஜோ இல்ல.. அதனால் இதையாவது செய்..! அர்ஷ்தீப் சிங்கிற்கு கம்பீர் அறிவுரை

66

உத்தேச இந்திய அணி:

பிரித்வி ஷா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
 

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி
ஷுப்மன் கில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!
Recommended image2
Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
Recommended image3
IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved