First Time Sex: முதல் முறை கன்னி கழியும் போது உண்டாகும்...வலியைக் குறைக்க சில எளிய டிப்ஸ் இதோ...

First Published Jul 16, 2022, 3:00 PM IST

First Time Sex: முதல் முறை உடலுறவு கொள்ளும் போது ஆண்களும், பெண்களும் ஒரு வித கவலையோடும், பயத்தோடும் இருப்பார்கள். உடலுறவு என்பது இயல்பான ஒன்றுதான். எனவே, இதை நினைத்து நீங்கள் அதிக பயம் கொள்ள தேவை இல்லை. இதனை எப்படி எளிய முறையில் கையாள்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

sexual

திருமண உறவில் தாம்பத்யம் முக்கியமான ஒன்று. ஆண்-பெண் இருவரும் உடலுறவு கொள்வதால்,  உச்சகட்ட இன்பத்தை பெற முடியும். உடலுறவு என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல மனமும் ஈடுபட்டால்தான் அது திருப்தியான உடலுறவாக இருக்கும். இதற்கு முன் உடலுறவு கொள்ளாதவர்கள், முதல் முறையாக உறவு வைத்து கொள்ளும் போது மிகவும் பதட்டமாக இருப்பார்கள். பெண்களுக்கு பொதுவாக கன்னித்திரை உடைக்கப் படுவதால், கொஞ்சம் வலிக்கவே செய்யும். அதே போல, ஆண்களும் முதல் முறை பெண்ணுறுப்பில் தங்கள் ஆண் குறியை நுழைக்கும் போது கொஞ்சம் எரிச்சல் இருக்கும். இதனால் இருவரும் தாங்கவிருக்கும் வலியைப் பற்றி நினைத்து மிகவும் பதற்றமடைகிறார்கள்.

மேலும் படிக்க....Married: ஆடி மாதத்தில் ஏன் புதுமண தம்பதிகள் ஒன்று சேர கூடாது.! இதுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கா?

sexual

முதல் முறை உடலுறவு என்பது வலிக்கவே வலிக்காது என்று சொல்ல முடியாது..? இருப்பினும் அதன் வலியை குறைப்பதற்கான வழிமுறைகள் ஏராளம் உள்ளன. அவற்றை பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. உடலுறவின் போது யோனி வறட்சி ஏற்படும். எனவே, நீங்கள் உடலுறவில் ஈடுபடும் முன்பு யோனியில் லூப் தடவவும். உங்கள் அந்தரங்கப் பகுதியில் லூப் பயன்படுத்துவது ஒரு சிறந்த அனுபவத்தை உருவாக்கும். எனவே, நீங்கள் அந்த இடத்தில  முத்தமிடுதல் மற்றும் தொடுதல் போன்ற ஃபோர்பிளேயை விளையாட்டு  முதல் முறை உடலுறவைக் கையாளுவதை எளிதாக்கும்.

sexual

2. எடுத்ததும் ஒரே அடியாக பாயாமல் மெல்ல மெல்ல உங்கள் விளையாட்டை துவங்குங்கள். எனவே கொஞ்சம் விளையாட்டு, குறும்பு என துவங்கினால் அது ஆர்வத்தை தூண்டும். பதட்டம் விலகும். உறவுக்கு முன்பு இருவரும் பேசிக்கொள்ளுதல் நல்லது. அப்படி பேசிக்கொள்ளும் போது வலி இல்லா மென்மையான உடலுறவுக்கும் இது வழிவகுக்கும்.

sexual


மிஷனரி அல்லது ஸ்பூனிங் போன்ற மிக எளிமையான பொசிஷனை பயன்படுத்துங்கள். இந்த நிலைகள் மற்ற பொசிஷனை விட பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்கும். எனவே, ஆரம்பத்தில் நீங்கள் கடினமாக பொசிஷனை முயற்சிக்க வேண்டாம்.

மேலும் படிக்க....Married: ஆடி மாதத்தில் ஏன் புதுமண தம்பதிகள் ஒன்று சேர கூடாது.! இதுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கா?

முதல் முறை என்பதால் வியர்வை சொட்ட சொட்ட உங்களால் செய்ய இயலாது. அதேபோல், எதையும் உங்களால் அந்த சமயத்தில் நிரூபிக்க முடியாது. இது போன்ற எண்ணங்கள் உங்களுக்குள் தேவையற்ற அழுத்ததை உண்டாக்கும். இதனால் உங்கள் பாலியல் வாழ்கை பாதிப்படையும்.
 

sexual

உறவில் உங்கள் துணைக்கு விருப்பமா..? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு ஏதேனும் அசௌகரியமாக உணர்ந்தால், தவறாகத் தெரிந்தால் உடனே உங்கள் துணையிடம் சொல்லிவிடுங்கள். திரைப்படங்களை பார்த்து அதிகமாக கற்பனை செய்தல், இதையெல்லாம் செய்ய வேண்டும் என ஓவராக முயற்சி செய்ய வேண்டாம். திரைப்படங்களில் காட்டப்படுவது வலியோ, சுகமோ மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். 

மேலும் படிக்க....Married: ஆடி மாதத்தில் ஏன் புதுமண தம்பதிகள் ஒன்று சேர கூடாது.! இதுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கா?

click me!