Parenting Tips : பெற்றோரின் விவாகரத்து குழந்தையை எந்த மாதிரி பாதிக்கும் தெரியுமா..?

By Kalai SelviFirst Published Apr 27, 2024, 1:44 PM IST
Highlights


ஒரு குழந்தைக்கு பெற்றோரின் அன்பு மிகவும் அவசியம். அத்தகைய சூழ்நிலையில், விவாகரத்து அவர்களை உணர்ச்சி ரீதியாக உடைக்கிறது. இந்த அதிர்ச்சியை அவர்களால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தையின் அன்பு மிகவும் அவசியம். அத்தகைய சூழ்நிலையில், பெற்றோர்கள் பிரிந்து செல்ல முடிவெடுத்தால், அது அவர்கள் மீது மட்டுமல்ல, அவர்களின் குழந்தைகளுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விவாகரத்து செயல்முறை மற்றும் அதன் பின்விளைவுகள் குழந்தைகளுக்கு உணர்ச்சி ரீதியாக சவாலாக இருக்கும் தெரியுமா..?

குறிப்பாக குழந்தையின் வயது 6 முதல் 12 வயதுக்குள் இருந்தால், பெறறோர்களின் விவாகரத்து அவர்களை ரொம்பவே பாதிக்கும். இந்த வயதில், குழந்தை வாழ்க்கை ஒரு கட்டத்தில் மட்டுமே உள்ளது. சொல்லபோனால், அவர்களால் எல்லா விஷயங்களை நன்றாக புரிந்து கொள்ளும் பகுதறிவு அவர்களுக்கு இல்லை. ஆனால் அவர்கள் கேட்டும் கேள்விகளோ மிகவும் ஆழமானவை.
மேலும், இந்த வயதில் ஒவ்வொரு குழந்தையும் மற்றவர்களுக்கு முன்னால் தன்னை எப்போதும் உயர்வாக காட்டுவத்தில் தீவிரமாக இருப்பார்கள்.

முக்கியமாக, இந்த வயதில் நடந்த நல்ல மற்றும் கெட்ட சம்பவங்களை அவர்களால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது. எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். ஆகையால், இந்த வயதில், குழந்தையை வளர்க்க பெற்றோர்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். இதனால் அவர்கள் உணர்ச்சி ரீதியாக ஆரோக்கியமாக இருக்க முடியும். சரி வாங்க.. இப்போது பெற்றோரின் விவாகரத்து குழந்தைகளை எந்தமாதிரி பாதிக்கும் என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படிங்க: Parenting Tips : உஷார்! குழந்தைகளுக்கு அதிக பிஸ்கட் மற்றும் குக்கீஸ் கொடுக்காதீங்க! இந்த பிரச்சினைகள் வரும்!!

பெற்றோரின் விவாகரத்து குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள்  இது: 

சோகம்: பெற்றோரின் விவாகரத்து செய்தியைக் கேட்டவுடன், குழந்தைகள் அடிக்கடி குழப்பம், கோபம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளை அனுபவிக்கிறார்கள். இது ஏன் நடக்கிறது மற்றும் அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்றே சொல்லலாம்.

பாதுகாப்பற்ற உணர்வு: பெற்றோர்களின் விவாகரத்து குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வை பலவீனப்படுத்தும் தெரியுமா... எப்படியெனில், வீட்டிலுள்ள சூழ்நிலை குழ்ந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அவர்கள்  பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். அதுமட்டுமின்றி, தங்கள் குடும்பம் சிதைந்து விட்டதாகவும், இனி நம்புவதற்கு யாரும் இல்லை என்றும் கூட அவர்கள் நினைக்க வாய்ப்பு அதிகம்.

கல்வி பாதிக்கப்படும்: பெற்றோர்களின் விவாகரத்து குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கும். மேலும், அவர்களால், வகுப்பில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியாது. அது அவர்களுக்கு கடினமாக இருக்கலாம். சொல்லபோனால்,  அவர்களின் கல்வி ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறையலாம். கூடுதலாக, பள்ளியில் மற்ற குழந்தைகளுடனான அவர்களின் உறவும் ரொம்பவே பாதிக்கப்படும்.

இதையும் படிங்க: Parenting Tips : குழந்தைகளின் எலும்புகள் Strong-ஆ இருக்க 'இந்த' உணவுகளை சாப்பிட கொடுங்க!

பெற்றோர்களுடான நேரம்: பெற்றோர்களின் விவாகரத்துக்குப் பிறகு, குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர் இருவருடனும் குறைந்த நேரம் மட்டுமே ம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இது அவர்களின் உறவுகளில் பதற்றத்தை ஏற்படும். இதனால், குழந்தைகள் ஒரு பெற்றோரைக் குறை சொல்லலாம் அல்லது அவர்களுக்கிடையேயான உறவில் விரிசல் வரலாம்

எதிர்காலம் பாதிக்கப்படும்: பெற்றோர்களின் விவாகரத்து குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கலாம். மேலும் அதை  பற்றிய கவலையை அவர்களுக்கு உருவாக்கும். பெற்றோரை போலவே தனது வாழ்க்கையிலும் இப்படி நடக்குமோ என்ற பயம் அவர்களுக்கு வரும்.

ஜப்பானில் சட்டம் : குழந்தைகளுக்கு பெற்றோர்களின் விவாகரத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினால், ஜப்பானிய அரசாங்கம் விரைவில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற உள்ளது. அதன் கீழ், பிரிந்த பிறகும், தங்கள் குழந்தையை வளர்க்க பெற்றோர்கள் ஒன்றாக உழைக்க வேண்டும் என்றுதான்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!