Parenting Tips : குழந்தைகளின் எலும்புகள் Strong-ஆ இருக்க 'இந்த' உணவுகளை சாப்பிட கொடுங்க!
குழந்தைகளின் எலும்பு வலுவாக இருக்க வைட்டமின் கே, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட கொடுங்கள்..
குழந்தைகளின் சிறந்த வளர்ச்சிக்கு எலும்பு வளர்ச்சி மிகவும் அவசியம். குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்களை கொடுப்பது பெற்றோருக்குப் பெரும் சவாலாக இருக்கும். நீங்களும் இந்த சவாலை எதிர்கொண்டால், பின்வரும் உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சிக்கவும்.
இந்த உணவுகளில் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் உள்ளதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால், அவர்களின் எலும்புகள் வலுவடைந்து, சிறந்த வளர்ச்சியைப் பெறுவார்கள
பால் பொருட்கள்: பால், சீஸ், தயிர் போன்றவை கால்சியத்தின் நல்ல ஆதாரமாகும். எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம். அதே நேரத்தில், குழந்தைகளுக்கு பால் பொருட்களில் சிறிது தேன் அல்லது எள்ளுடன் கலந்து கொடுத்தால், எலும்புகளால் கால்சியம் உறிஞ்சப்படும்.
பச்சை காய்கறிகள்: கீரை வகைகள் கோஸ், பாசிப்பருப்பு ஆகியவற்றில் கால்சியம், வைட்டமின் கே, மெக்னீசியம் மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மீன்: சால்மன், மத்தி போன்ற மீன்களில் வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை எலும்பு வளர்ச்சி, அடர்த்தி மற்றும் உணவு கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன.
இதையும் படிங்க: Parenting Tips: கோடையில் குழந்தைகளை தாக்கும் பொதுவான தொற்றுக்கள் இவைகளே! அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
நட்ஸ்கள் மற்றும் விதைகள்: பாதாம், சியா விதைகள் மற்றும் எள் போன்ற பருப்புகளில் கால்சியம், செலினியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றன.
இதையும் படிங்க: Parenting Tips : உஷார்! குழந்தைகளுக்கு அதிக பிஸ்கட் மற்றும் குக்கீஸ் கொடுக்காதீங்க! இந்த பிரச்சினைகள் வரும்!!
பருப்பு வகைகள்: பீன்ஸ், கொண்டைக்கடலை, ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் கால்சியம், கரையாத நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் புரதத்தின் நல்ல ஆதாரங்களாகும். இவை அனைத்தும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D