Nepolean: நடிகர் சங்கம் கட்டிட பணிக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்த நடிகர் நெப்போலியன்!

First Published Apr 29, 2024, 5:32 PM IST

நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக, பிரபல நடிகரும், முன்னாள் MP-யுமான நெப்போலியன் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
 

nepolean

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக பாதியிலேயே நிற்கிறது. சுமார் 70 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் இன்னும் 30 சதவீத பணிகள் மட்டுமே எஞ்சி உள்ளதாகவும் தகவல் வெளியானது.

nepolean

ஏற்கனவே கட்டிடம் கட்ட பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ள நிலையில்... முழுமையாக பணிகளை முடிக்க இன்னும் ரூ.40 கோடி வரை தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் வங்கியில் கடன் பெற்று கட்டிட பணிகளை முடிக்க முடிவு செய்தனர்.

கவுண்டமணியுடன் இணைந்து நடித்துள்ள 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர்! புகழ்ந்து தள்ளிய காமெடி கிங்.!

nepolean

இந்நிலையில் மீண்டும் நடிகர் சங்க கட்டிட பணி துவங்கி துரிதமாக நடந்து வரும் நிலையில்... பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதி உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதி உதவி செய்த நிலையில் தற்போது பிரபல நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நடிகர் சங்க கட்டிட பணிக்கு வழங்கியுள்ளார்.

இந்த தகவலை நடிகர் சங்க தலைவர் நாசர், அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் கூறி உள்ளதாவது,  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும்  2000 – 2006 ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான, திரு.நெப்போலியன் அவர்கள் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. என கூறியுளளார். 

Amala Paul: வயிற்றில் நிறைமாத குழந்தையோடு.. டைட்டான கவர்ச்சி உடையில் அமலா பால் நடத்திய ஃபர்ஸ்ட் போட்டோ ஷூட்!

click me!