எது சாப்பிடலாம்? தயிரா..?? மோரா.??

First Published Oct 5, 2022, 12:43 PM IST

அதிகமாக வெளியில் சுத்தக்கூடிய பணிகளில் இருப்பவர்கள், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்போட்ட பழச்சாறுகளை குடிப்பதை விடவும், மோர் அல்லது தயிரை வீட்டிலிருந்து கடைந்து எடுத்துக்கோண்டு போய் தாகம் எடுக்கும் போது குடித்து வரலாம். பலருக்கும் வெயிலுக்கு இதமாக தயிர் குடிப்பது சிறந்ததா அல்லது மோர் குடிப்பது சரியா போன்ற கேள்விகள் இருக்கலாம். அதற்கான விளக்கம் கீழே மருத்துவ உண்மைகளுடன் விளக்கப்பட்டுள்ளது.
 

Curd Vs. Buttermilk

தற்போது குளிர்காலம் நிலவுகிறது. எனினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. எப்போது செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் சற்று அதிகமாக இருக்கும். ஐப்பசி வந்த பிறகு மழைக்காலம் துவங்கி குளிர் உருவாகும். அதுவரை குறிப்பிட்ட மாவட்ட மக்கள் வெயிலை பொறுத்து தான் ஆக வேண்டும். 

அதிகமாக வெளியில் சுத்தக்கூடிய பணிகளில் இருப்பவர்கள், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்போட்ட பழச்சாறுகளை குடிப்பதை விடவும், மோர் அல்லது தயிரை வீட்டிலிருந்து கடைந்து எடுத்துக்கோண்டு போய் தாகம் எடுக்கும் போது குடித்து வரலாம். பலருக்கும் வெயிலுக்கு இதமாக தயிர் குடிப்பது சிறந்ததா அல்லது மோர் குடிப்பது சரியா போன்ற கேள்விகள் இருக்கலாம். அதற்கான விளக்கம் கீழே மருத்துவ உண்மைகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

Curd Vs. Buttermilk

திடமான உணவுக்கு தயிர்ச் சோறு

வெயில் அதிகமாக இருக்கும் போதோ அல்லது உடல் சூட்டை தணிக்கவோ மட்டும் தான் நீர் ஆகாரங்களை நாம் உட்கொளிகிறோம். உடல்சூட்டை தவிர்க்க விரும்புபவர் இளநீர், பழச்சாறுகள், தண்ணீர், மோடி குடிக்கலாம். திட உணவாக தயிர்ச் சோறு சாப்பிடலாம். வயிற்றுப் பிரச்னை கொண்டவர்களுக்கும் தயிர்ச் சோறு நிவர்த்தியை தரும். ஆனால் தயிர்ச் சோறு சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகிவிடும் என்று கூறப்படுவதுண்டு.

Curd Vs. Buttermilk

நீர் ஆகாரத்துக்கு மோர்.

மேலும் தயிர்ச் சாப்பாடு அனைவருக்கும் உகந்தது கிடையாது. அதனால் செரிமானக் கோளாறு பிரச்னைகள் கூட ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகையில், வெயில் அல்லது அதிக தட்பவெட்ப நிலையில் இருக்கும் காலத்தில் இயல்பாகவே செரிமானக் கோளாறு பிரச்னை இருக்கும். ஒருசிலருக்கு இதனால் உடல் சூடும் அதிகரிக்கும். அதனால் தயிரை விட மோரை முக்கியப்படுத்தி சாப்பிடுவது நன்மையை தரும் என்று கூறுகின்றனர்.

Curd Vs. Buttermilk

பால் பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது

பெரும்பாலும் பால் உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பது கிடையாது. அப்படி வைக்கப்படும் போது பால் பொருட்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் நிலையை பெற்றுவிடுகின்றன. தயிர் சாப்பிடுவதால் உடல்வெப்பநிலை சமநிலையாகிவிடும். வயிற்றுப் புண்களும் ஆறும். தயிருக்கும் மோருக்கும் குளிர்ச்சி தரும் பண்புகள் இருந்தாலும், தயிரை விட மோர் தான் அதிக குளிர்ச்சியானது. தனியாக குடிக்கும் போது மோர் சிறந்தது. ஆனால் அரிசிச் சோற்றுடன் சாப்பிடும் போது தயிருடன் சாப்பிடுவது நல்லது .
 

Curd Vs. Buttermilk

தினமும் தயிர் சாப்பிடக்கூடாது

தினமும் தயிர் சாப்பிடுவதால் சுவாசப் பிரச்னைகள், இருமல், சரும நோய்கள், சீழ்கட்டி போன்றவை ஏற்படும் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. ஆனால் மோர் தினசரி குடிப்பதால் எந்த பிரச்னையும் வந்துவிடாது. அதனால் அவ்வப்போது தயிரையும் மோரையும் மாற்றி மாற்றி உட்கொள்வது உடல்நலனுக்கு நண்மையை தரும். தினமும் மோர் குடித்தால் சுண்ணாம்புச் சத்து அதிகரிக்கும், வயிற்றுப் பிரச்னை நீங்கும், உடலில் நீரிழப்பு ஏற்படாது. சரும பிரச்னையை குணப்படுத்தும். 

Curd Vs. Buttermilk

மோர் சாப்பிடுவதிலுள்ள நன்மை

மேலும் வாய்ப்புண், வயிற்றுப்புண் வராது. மூலநோயைக் குணப்படுத்த உதவும். மூலநோய் உள்ளவர்கள் தயிர் சாப்பிடக் கூடாது மோர்தான் சாப்பிட வேண்டும். எப்போது தயிரை சாப்பிடாலும் சரியான அளவில் புளித்த தயிரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகளவில் புளித்த தயிர் உடலுக்கு ஆகாது. உடல் குளிர்ச்சிக்காக இதை உட்கொண்டால் வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் உடல் சூட்டு அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் அடுத்தடுத்து உருவாகும். 

Curd Vs. Buttermilk

எது மோர்?

தயிரில் தண்ணீரை ஊற்றி சாப்பிடுவதால் அது மோராகி விடாது. தயிரில் தண்ணீரை ஊற்றி, கடைந்து அதில் இருந்து வெண்ணையைப் பிரித்தெடுத்தால் மட்டுமே அது மோர். அதனால் இனிமேல் வீட்டில் எப்போதும் தயிரை தண்ணீர் ஊற்றி சிலிப்பி வைத்து, வெண்ணையை எடுத்துவிட்டு அந்த தண்ணீரை பயன்படுத்தவும். 

click me!