103 வயதான தாத்தாவிற்கு சிஎஸ்கே ஜெர்சியில் உங்களுடைய ஆதரவிற்கு நன்றி Thatha என்று குறிப்பிட்டு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்த தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலெ தல தோனி தால். தோனி என்றாலே சிறியவர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளங்கள் தான். தோனியை ஒரு முறையாவது பார்த்திர மாட்டோமா என்று ஏங்கும் ரசிகர்களும் எத்தனையோ எத்தனையோ…அப்படிப்பட்ட தோனிக்கு வயதான தாத்தா ரசிகராக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.
கண்ணுக்கு தெரிந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் போது கண்ணுக்கு தெரியாமல் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இந்த நிலையில் தான் தற்போது சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் தோனி கடைசி ஒரு சில ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்ய வந்து ரசிகர்களுக்கு தனது பேட்டிங் திறமையால் விருந்து கொடுத்து வருகிறார்.
தற்போது வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய 4 போட்டிகளிலும் கட்டாய வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சிஎஸ்கே இனி வரும் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
வரும் 12 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தனது ஹோம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில், தான் தோனியின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தோனி 103 வயது நிரம்பிய தாத்தாவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியில் 103 என்று குறிப்பிடப்பட்டு எஸ் ராம்தாஸ் என்று பெயரிப்பட்டுள்ள ஜெர்சியில் தோனி ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி உங்களது ஆதரவிற்கு நன்றி தாத்தா என்று தோனி எழுதியுள்ளார்.
தோனி கொடுத்த சிஎஸ்கே ஜெர்சியை தாத்தா அணிந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A gift for the 1⃣0⃣3⃣ year old superfan 💛
Full story 🔗 - https://t.co/oSPBWCHvgB pic.twitter.com/hGDim4bgU3