கொரோனாவை விட ஆபத்தான மார்பர்க் வைரஸ்... பீதியை ஏற்படுத்தும் மரணங்கள், அதன் அறிகுறிகள் என்ன?

First Published | Feb 14, 2023, 7:29 PM IST

மோசமான அறிகுறிகளுடன் பரவும் மார்பர்க் வைரஸ் நோய் தாக்குதல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது. 

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஈகுவேடோரியல் கினியா எனும் பகுதியில் தான் மார்பர்க் என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. எபோலா, கொரோனா போலவே இந்த வைரஸும் விலங்கிலிருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது. எபோலா வைரஸ் வகையை சேர்ந்த மார்பர்க் வைரஸ் தாக்கினால், வயிற்றுப்போக்கு, பிறப்புறப்பில் ரத்தப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது எபோலா வைரஸ் நோய்க்கு உண்டான அதே அறிகுறிகள் தான். 

இவை வெளவால்களிலிருந்து பரவும் என கூறப்படுகிறது. மார்பர்க் வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டால் 88 சதவீதம் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்த வைரஸ் மிகவும் கொடியது. இந்த வைரஸ் தாக்கியதும் முதலில் மோசமான காய்ச்சல் ஏற்படும். அத்துடன் ஓயாத இரத்தப்போக்கு வரவும் வாய்ப்புள்ளது. உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்யும் திறன் இந்த வைரஸுக்கு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய மனிதர்களிடம் இருந்தும் பரவ வாய்ப்புள்ளது. 

Latest Videos


இந்த வைரஸ் தாக்கி நோய்த்தொற்று ஏற்பட்ட ஏழு நாட்களுக்குள் கடுமையான ரத்தக்கசிவு அறிகுறிகள் தென்பட தொடங்கும். அதாவது வைரஸ் தாக்கிய நபரின் கண்கள், மூக்கு மற்றும் ஈறுகள் ஆகிய துவாரங்கள் வழியே ரத்தம் கசியும். காய்ச்சல், உடல் வலி, சோர்வு ஆகிய ஆரம்ப அறிகுறிகள் தோன்றுவதற்கு சில நாட்கள் ஆகலாம். திடீரென கொடிய காய்ச்சல் ஏற்படும். தலைவலி, தசை வலிகள், சோர்வு, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு, நெஞ்சு வலி, தொண்டை வலி, தோல் வெடிப்பு ஆகியவை தோன்றலாம். 

இந்த வைரஸை பரவாமல் தடுக்க சில வழிகளே உள்ளன. இவற்றைக் கடத்தக் கூடிய வௌவால்கள் மற்றும் பிற விலங்குகளுடன் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தகுந்த இடைவெளியை மேற்கொள்ள வேண்டும். கையுறைகள், மாஸ்க் முறையே பாதுகாப்பு ஆடைகளை கூட அணியலாம். 

மார்பர்க் வைரஸ் தாக்கினால் பூரணமாக குணப்படுத்த குறிப்பிட்ட தடுப்பூசி அல்லது எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் நோய் தாக்கும் நபர்கள் பெரும்பாலும் இறக்க நேரிடுகிறது. ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் தாக்கிய 10க்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துள்ளனர். தொற்றுக்குள்ளான 200க்கும் மேற்பட்டவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ஆண்மைக்கு அவமானம்..! படுக்கையறையில் இந்த தவறை செய்யும் ஆண்களை வெறுக்கும் பெண்கள்..நிபுணரின் அட்வைஸ்

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடுவது நல்லதா? கட்டுக்கதையும் உண்மையும்!

click me!