மனதை விட்டு நீங்காத விவேக்கின் 4 கதாபாத்திரங்கள்!

First Published | Nov 19, 2024, 6:58 PM IST

Actor Vivek : இன்று நவம்பர் 19ம் தேதி மறைந்த மாபெரும் கலைஞன் சின்னக்கலைவனர் விவேக்கின் 63வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது.

Actor Vivek

இந்த கொரோனா காலத்தில் நம்மை விட்டு மறைந்த மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர் தான் சின்னக் கலைவாணர் விவேக். தன்னுடைய இயல்பான நடிப்பால், துடிப்பான வசனங்களால் மக்களை வெகுவாக கவர்ந்தவர் அவர். மறைந்த, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வழியில் நடந்த ஒரு அற்புதமான மனிதர் Vivek. ஒரு கோடி மரங்கள் என்ற இலக்கோடு பயணித்த சின்ன கலைவாணர் விவேக், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி காலமானார். இந்நிலையில் இன்று நவம்பர் 19ஆம் தேதி அவருடைய 63 வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விவேக்கின் மேலாளராக பணியாற்றி பின்னாளில் நடிகராக மாறிய செல் முருகன் தான் இப்பொது அந்த மரம் நடும் பணியை கவனித்து வருகிறார். 

50 கோடி முதல்; 300 கோடி வரை - சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக்கிய டாப் 4 படங்கள்!

Actor Vivek

இந்த நாளில் தமிழ் சினிமாவில் எந்த காலத்திலும் மறக்கவே முடியாத நடிகர் விவேக்கின் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து காணலாம். கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான "புது புது அர்த்தங்கள்" என்கின்ற திரைப்படத்தில் "விட்டல்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விவேக். இது அவருடைய இரண்டாவது திரைப்படம். இந்த திரைப்படத்தில் தான் "இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்" என்கின்ற வசம் வரும். அதன் மூலம் அவர் பெரிய அளவில் பேசப்பட்டார். கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "யூத்" என்கின்ற திரைப்படத்தில் "கருத்து" கந்தசாமி என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். 
உண்மையில் இந்த படம் முழுதும் மூடநம்பிக்கைக்கு எதிரான பல கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos


Vivek Birthday

கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான "பாய்ஸ்" திரைப்படத்தில் "மங்கலம் சார்" என்கின்ற கதாபாத்திரத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பார் விவேக். ஒரு இளைஞர் பட்டாளம், பல திறமைகளை வைத்துக்கொண்டு அடுத்த கட்டம் என்ன செய்ய வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்போடு செல்லும் பொழுது, ஒரு நல்ல நண்பனாக ஒரு சிறந்த ஆசிரியராக அவர்களோடு இணைந்து இருந்து அவர்களுடைய உயர்வுக்கு வழிவகுக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். காலம் கடந்து அவருடைய இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

Chinna Kalaivanar

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "உத்தம புத்திரன்". இந்த திரைப்படத்தில் எமோஷனல் ஏகாம்பரம் என்கின்ற ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். தனுஷ் மற்றும் நடிகை ஜெனிலியா இடையே மாட்டிக் கொண்டு தவிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்து அசத்தியிருப்பார். அவருடைய திரை வரலாற்றில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான கதாபாத்திரங்களில் அதுவும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

இப்படி மட்டும் செஞ்சிடாதீங்க! 'கங்குவா' குறித்து இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கை!

click me!