இப்படி மட்டும் செஞ்சிடாதீங்க! 'கங்குவா' குறித்து இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கை!

First Published | Nov 19, 2024, 5:53 PM IST

கங்குவா படத்தை தன்னுடைய குடும்பத்துடன் பார்த்து ரசித்த, இயக்குனர் சுசீந்திரன் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.
 

Suriyas Kanguva film

ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே... ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி அணைத்து தரப்பு ரசிகர்களாலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படைப்பாக கடந்த நவம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் தான் 'கங்குவா'. இந்த படத்தில் சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைத்த நிலையில், இந்த படம் சாதாரணமான கதையாக இல்லாமல் வரலாற்று கதைக்களத்தோடு, ஒரு ஃபேண்டஸி திரைப்படமாக உருவானது.

Kanguva Movie Expectation

இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைவதக்கு முன்பே.. இந்த படம் 500 கோடி வசூல் செய்ததாக சில தயாரிப்பாளர்கள் கூறியது, 'அப்படி இந்த படத்தில் என்ன தான் இருக்கிறது? என்கிற ஆவலை தூண்டியது. பாகுபலி படத்திற்கு நிகராக இப்படம், சுமார் 1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, பட வெளியான பின்னர் கிடைத்த விமர்சனங்கள் பேரதிர்ச்சியை கொடுத்தது. படத்தை பற்றி தொடர்ந்து வெளியான எதிர்மறையான விமர்சனங்களால், 'கங்குவா' போட்ட பணத்தை கூட வசூலிப்பது கடினம் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

நடிகை கரீனா கபூரை கடுமையாக விமர்சித்த இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி; ஏன்?
 

Tap to resize

Kanguva

இந்த படத்தின் கதை ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக நகர்வது, மற்றும் இரண்டாம் பாகத்தில் இசை சரி இல்லை இரைச்சலாக உள்ளது என சில குறிப்பிட்ட விஷயங்களை குறையாக கூறி வந்தாலும், சூர்யாவின் நடிப்பிலோ அல்லது இந்த படத்திற்கு அவர் போட்டுள்ள உழைப்பையோ இதுவரை ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அனைவருமே சூர்யாவின் நடிப்பு அபாரம் என பாராட்டி தான் வருகிறார்கள். படத்தின் காட்சிகளை இன்னும் மெருகேற்றும் விதமாக சுமார் 12 நிமிட காட்சியை கத்தரி போட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது கங்குவா படம் குறித்து பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுசீந்திரன் படம் குறித்த தன்னுடைய விமர்சனத்தை அறிக்கையாக வெளியுள்ளார்.

Suseendran

நேற்று மாலை என் குழந்தைகளுடன் கங்குவார் திரைப்படத்தை பார்த்தேன் தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரம்மாண்டமான திரைப்படம் இது ரசிக்கும் படியான திரைக்கதை அமைத்துள்ளார். சிவா இயக்குனர் அவர்கள் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சூர்யா சாரின் நடிப்பு உழைப்பு பிரமிக்க வைக்கிறது கேமரா சிஜி என அனைத்து துறைகளிலும் உலக தரத்துக்கு தமிழில் இந்த கங்கு வா தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த திரைப்படத்தை பாருங்கள் கங்குவா உங்களை மகிழ்விப்பான்

'கங்குவா' படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை? வைரலாகும் புகைப்படம்!

Latest Videos

click me!