நடிகை கரீனா கபூரை கடுமையாக விமர்சித்த இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி; ஏன்?

First Published | Nov 19, 2024, 4:08 PM IST

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, பிரபல நடிகை கரீனா கபூர் கான் தனது ரசிகர்களை மதிக்காமல் நடந்து கொண்டதற்காக குற்றம் சாட்டிய தகவல் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
 

Kareena Kapoor Ignore Fans

கரீனா கபூர் விமான பயணத்தின் போது, ரசிகர்களைப் புறக்கணித்ததாக நாராயண மூர்த்தி கடந்த ஆண்டு தன்னுடைய வீடியோ ஒன்றில் கூறி உள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் கரீனா கபூர் பற்றி பகிர்ந்த இந்த தகவல் மீண்டும் வைரலாகி வருகிறது.
 

Narayana Moorthy slam Kareena

​​நடிகை கரீனா கபூர், மீதான அன்பின் காரணமாக அவரை தேடி வந்து பல ரசிகர்கள் பேச முயன்ற போதும், அவர் தனது ரசிகர்களை புறக்கணித்துள்ளார். இவற்றை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த  இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சுதா மூர்த்தி அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். மேடையில் இருந்ததால் சோர்வாக உணரலாம், மில்லியன் கணக்கான மக்கள் இது போல் கூறுவது அவருக்கு பழகி பொய் இருக்கலாம் என கரீனா கபூரை ஆதரிப்பது போல் பேசியுள்ளார்.

'கங்குவா' படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை? வைரலாகும் புகைப்படம்!
 

Tap to resize

Narayana Murthy

இருப்பினும், நாராயண மூர்த்தி கரீனாவிடம் பிரச்சனையாக கூறியது...யாராவது பாசத்தைக் காட்டினால், அதைத் அவமதிக்காமல் திருப்பிக் காட்டலாம்". அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது அதை மட்டுமே. அதே போல் நீங்கள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் ரசிகர்களை கடந்து வந்தாலும், உங்கள் ஈகோவைக் குறைந்து கொள்ள வேண்டும் என்பது போல் பேசி இருந்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு, பாலிவுட் மட்டும் இன்றி, இந்திய அளவில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது.
 

Kareena Kapoor Khan Cinema Carrier

பாலிவுட் திரையுலகில் 20 வருடங்களாக நடித்து வரும் கரீனா கபூர், அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்த அகதி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏராளமான படங்களில் அடுத்தடுத்து நடித்தார். 90-களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த கரீனா கபூர், நடிகர் சைப் அலிகானை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தைமூர் - ஜஹாங்கீர் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

மகள் காதலை ஜீரணிக்க முடியல! பேரனால் மன்னித்தேன் - பாக்கியாஜ் பகிர்ந்த ரகசியம்!
 

Kareena Kapoor Khan

திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வலுவான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். அதே போல் சமீப காலமாக வெப் சீரிஸ்களிலும் கரீனா கபூர் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கரீனா பற்றி கூறிய தகவல் மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Latest Videos

click me!