தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குபவர் பாலா. விக்ரம் நடித்த சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலா, அடுத்தடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் என தொடர்ந்து பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இவர் இயக்கத்தில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், கடந்த 2021ம் வணங்கான் படத்தை அறிவித்தார்.