நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான, 'கங்குவா' திரைப்படத்தில், 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகை நடித்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சீரியலில் நடிக்கும் நடிகைகள் பலர், தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகின்றனர். ஹீரோயின் சான்ஸ் கிடைக்கவில்லை என்றாலும், ஹீரோயினின் தோழி, ஹீரோவின் தங்கை, போன்ற கதாபாத்திரமாவது கிடைக்காதா? என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு. அந்த வகையில், டான்சரும் - நடிகையுமான ஹேமா தயாள் சூர்யாவுடன் சேர்ந்து 'கங்குவா' படத்தில் நடித்துள்ளனர்.
25
Hema Dayal
ஹேமா தயாள் தனியார் தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் குரூப் டான்சராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே ஜகமே தந்திரம், சர்க்கார், திருச்சிற்றம்பலம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் டான்சராக பணியாற்றியுள்ளார் ஹேமா தயாள். பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பதால், அப்படியே சீரியலிலும் வாய்ப்பு தேட துவங்கினார்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான 'அன்பே வா' சீரியலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கான வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்திக்கொண்ட இவர், இதை தொடர்ந்து 'எதிர்நீச்சல்' தொடரிலும் கேமியோ ரோலில் குந்தவை என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
45
Kanguva Movie
அதாவது ஜனனி சக்தியை பிரிந்து சென்ற பின்னர், குணசேகரன் இவரை தான் தன்னுடைய தம்பிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க தயார் ஆவார். பின்னர் அந்த திருமணம் நிறுத்தப்படும். எனவே தன்னுடைய அப்பாவுடன் மீண்டும் வெளிநாட்டுக்கே இவர் செல்வது போல் காட்சிகள் இடம்பெற்றது.
'எதிர்நீச்சல்' சீரியலில் ஹேமா தயாள் சில வாரங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், இவரது கதாபாத்திரம் அதிகம் கவனிக்கப்பட்டது. இவர் தற்போது சூர்யா - சிவா காம்போவில் உருவான, 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஹேமா தயாள் என்பது குறிப்பிடத்தக்கது.