கங்குவாவுக்கு இத்தன கோடி நஷ்டமா? 11 வருஷமா நஷ்டத்தை மட்டும் பார்த்து வரும் சூர்யா படங்கள்!

First Published | Nov 19, 2024, 3:09 PM IST

Suriya's Kanguva Movie Loss Details : சூர்யா நடிச்சு வெளியான கங்குவா கோடிக் கணக்குல நஷ்டத்த சந்தித்துள்ளது என்று தகவல் வெளியாகியிருக்கு. அதைப் பத்தி முழுசா பாக்கலாம்.

Kanguva Suriya Failure Movie, Suriya's Kanguva Movie Loss Details

Suriya's Kanguva Movie Loss Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரா இருப்பவர் நடிகர் சூர்யா. சினிமா பின்புலத்தை வைத்து நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். ஒரு காலத்துல அப்பா மட்டும் சினிமால நடிச்சாரு. இப்போ 2 மகன்கள், மருமகள் என்று எல்லோருமே சினிமால நடிச்சிட்டு வர்றாங்க. முதல் படத்தையே ஹிட் படமா கொடுத்த சூர்யா 2ஆவது படமான காதலே நிம்மதி படத்த தோல்வி படமா கொடுத்தாரு. சந்திப்போமா, பெரியண்ணா, ஸ்ரீ, மாயாவி, அஞ்சான், என்ஜிகே என்று தோல்வி படங்களை கொடுத்தார்.

Suriya Failure Movies

இதுல ஜெய் பீம் படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துச்சு. ஆனால், கடந்த 11 வருசமா சூர்யா ஒரு ஹிட் படத்த கூட கொடுக்கல. சிங்கம் படம் தான் சூர்யாவுக்கு ஹிட் கொடுத்தது. அந்தப் படத்துல போலீஸ பெருமையா காட்டிட்டு இப்போ கங்குவா படத்துல போலீஸுக்கு எதிர்மறையான ஒரு ரோலில் நடிச்சிருக்காரு.

இதுவரையில் சூர்யா 43 படங்களில் நடிச்சிருந்தாலும் இதுல பாதி படத்துக்கு மேல தோல்வி படங்களாக வந்துருச்சு. அதோடு நஷ்டமும் கொடுத்துருக்கு. என்னென்ன படங்கள் சூர்யாவுக்கு நஷ்டம் கொடுத்த படங்கள் என்று பார்க்கலாம் வாங்க…

Latest Videos


Suriya Hit and Flop Movies

அஞ்சான்:

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படம் அஞ்சான். 2014ல் திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை. கிருஷ்ணா தனது சகோதரர் ராஜூ பாயை தேடி மும்பை வருகிறார். ராஜூபாயின் கேங்ஸ்டர் ஃப்ரண்ட்ஸ் மூலம், அவரது கடந்தகால வாழ்க்கை தெரியவருகிறது. கடைசியில் ராஜூ பாய் யார், அவருக்கு என்ன நடந்தது என்பது தான்.

மாசு என்கிற மாசிலாமணி:

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் மாசு என்கிற மாசிலாமணி. இந்தப் படத்தில் நயன்தாரா, பிரணிதா சுபாஷ், பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரக்கனி ஆகியோ பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா தான் இந்தப் படத்திற்கு இசை. சூர்யாவும், ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரித்த இந்த படம் அட்டர் பிளாப் பட்டியலில் சேர்ந்தது.

Suriya Loss Movies

24:

இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த இந்த படம் நஷ்டத்தை சந்தித்தது. சூர்யாவே தன்னோட 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.

சிங்கம் 3:

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதி ஹாசன், தாக்கூர் அனூப் சிங், ரோபோ சங்கர் ஆகியோர் பலர் நடிச்சு 2017ல் வெளியான படம் தான் சிங்கம் 3 (சி3). ஞானவேல் ராஜா இந்த படத்த தயாரித்திருந்தார்.

தானா சேர்ந்த கூட்டம்:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோர் நடிச்சு 2018ல் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். முழுக்க முழுக்க ஊழலுக்கு எதிரான கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் அட்டர் பிளாப் பட்டியலில் இணைந்தது.

Suriya Failure Movies

என்ஜிகே

செல்வராகவன் இயக்கத்தில் முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிச்சிருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசை.

காப்பான்:

இயக்குநர் கே வி ஆனந்த் இயக்கத்தில் மோகன் லால், ஆர்யா, சூர்யா, சாயிஷா ஆகியோர் பலர் நடித்து வெளியான படம் தான் காப்பான். 2019ல் திரைக்கு வந்த இந்த படம் நஷ்டத்தை வாரி கொடுத்துள்ளது.

எதற்கும் துணிந்தவன்:

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சரண்யா பொவண்ணன், சத்யராஜ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிச்சு வெளியான படம் எதற்கும் துணிந்தவன். கல்லூரி மாணவிகளுக்கு எதிராக நடக்கும் கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் ஆவரேஜ் பட பட்டியலில் சேர்ந்தது.

Kanguva Rs 180 Crore Loss?

கங்குவா

இப்படி வரிசையாக தோல்விய கொடுத்து வந்த சூர்யாவுக்கு கங்குவா நம்பிக்கையான படமாக இருக்கும் என்று நம்பினார். அதனால், படம் வெளியாவதற்கு முன்னர் படத்த பத்தி ஓவரா பில்டப் கொடுத்து பேசினார். ரூ.2000 கோடி வரையில் வசூல் கொடுக்கும் என்று குறிப்பிட்டார். ஆனால், படம் வெளியான பிறகு தான் தெரிந்தது கங்குவாவிற்கு எதிர்மறை விமர்சனமே மிஞ்சியது.

இரைச்சல், இசையின் சத்தம் அதிகமாக இருந்தது இப்படியெல்லாம் குற்றச்சாட்டு எழுந்தது. ரூ.350 கோடில தயாரித்த படம் என்று சொல்றாங்க. இப்படி படத்தில் பட்டி டிங்கரில் ஒர்க் செய்யப்பட்டு மீண்டும் படத்தை ரிலீஸ் பண்ண போவதாக சொல்றாங்க. எதிர்மறையான விமர்சனத்தை சந்தித்த கங்குவா திரையரங்குகளிலிருந்து வெளியேற போகுது. இந்த நிலையில் தான் இந்தப் படம் ரூ.180 கோடி வரையில் நஷ்டத்த கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை. தயாரிப்பு நிறுவனமோ படம் சூப்பர் ஹிட் என்றும், 2ஆம் பாகம் வரும் என்று கூறி வருகிறது.

click me!