50 கோடி முதல்; 300 கோடி வரை - சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக்கிய டாப் 4 படங்கள்!

First Published | Nov 19, 2024, 6:33 PM IST

Sivakarthikeyan : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி திருநாளுக்கு வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய் என்ற வசூலை தாண்டி பயணித்து வருகின்றது.

Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் "மெரினா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய கலை உலக பயணத்தை தொடங்கியவர் தான் சிவகார்த்திகேயன். அதற்கு முன்னதாக பல ரியாலிட்டி ஷோக்களை இவர் தொகுத்து வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மெல்ல மெல்ல சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, நகைச்சுவை நாயகனாக மாறி தான், இப்போது ஒரு மிகப்பெரிய ஆக்சன் ஹீரோவாக அவர் உருவெடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல வசூல் சாதனைகளை பொருத்தவரை குறைந்த அளவிலான வசூலை கொடுக்க தொடங்கி இன்று 300 கோடி என்கின்ற மெகா வசூலை ஈட்டக்கூடிய பெரும் நடிகராக அவர் மாறியுள்ளார்.

நடிகை கரீனா கபூரை கடுமையாக விமர்சித்த இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி; ஏன்?

Maan Karate

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனருக்கு கிரஸ் திருமுருகன் இயக்கத்தில், அனிருத் திசையில் வெளியான திரைப்படம் தான் "மான் கராத்தே". இந்த திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, சதீஷ், ஷாஜி ஷென், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றில் முதல் முறையாக சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்த மெகா ஹிட் படமாக மாறியது மான் கராத்தே. அதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான "ரோமியோ" திரைப்படம் அவருக்கு முதன் முதலில் 75 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படமாக மாறியது. இந்த திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்தார்.

Tap to resize

Doctor

தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான "டாக்டர்" என்கின்ற திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றிலேயே முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக மாறியது "டாக்டர்". அதைத் தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு பிரபல இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன்தாஸ், எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி உள்ளிட்டவர்களுடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "டான்". சிவகார்த்திகேயனுக்கு முதல் முதலில் 125 கோடி வசூல் செய்து கொடுத்த படம் இது தான்.

Amaran

தொடர்ச்சியாக நல்ல பல படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திக்கேயன், இந்த ஆண்டு தீபாவளிக்கு தன்னுடைய அமரன் திரைப்படத்தை வெளியிட்டார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசனின் தயாரிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. தீபாவளிக்கு வெளியான 4 திரைப்படங்களில் மெகா ஹிட் படமாக மாறியது சிவகார்த்திகேயனின் அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் அவருடைய கேரியர் பெஸ்ட் படமாக மாறி இப்போது 300 கோடி ரூபாய் என்ற வசூலை தாண்டி பயணித்து வருகிறது.

கமல் படத்தில் நடிக்க வந்த ஆஃபர்; ஓப்பனாக நோ சொன்ன ஆர்.ஜே.பாலாஜி; என்ன காரணமா இருக்கும்?

Latest Videos

click me!