துபாயில் பல கோடி சொத்துக்கு அதிபதி; கீர்த்தியை திருமணம் செய்ய உள்ள அந்தோணி தட்டில் யார்?

Published : Nov 19, 2024, 07:47 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலரான, அந்தோணி தட்டிலை டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி, கோவாவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. கீர்த்தி திருமணம் செய்து கொள்ள உள்ள அவருடைய காதலர் யார்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.  

PREV
16
துபாயில் பல கோடி சொத்துக்கு அதிபதி; கீர்த்தியை திருமணம் செய்ய உள்ள அந்தோணி தட்டில் யார்?
Keerthy Suresh Marriage News

தமிழ் சினிமா நடிகைகள் அடுத்தது தங்களின் திருமணம் குறித்த தகவலை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் தான் நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து, நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம், டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவர்களை தொடர்ந்து, நடிகை கீர்த்தி சுரேஷும் தன்னுடைய பேச்சிலர் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட தயாராகி விட்டார்.
 

26
Keerthy Suresh Marriage date

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்டகால காதலரான, துபாயை சேர்ந்த தொழிலதிபர் அந்தோணி தட்டில் என்பவரை கோவாவில் ரகசிய விழாவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் கீர்த்தி - அந்தோணி திருமணம் டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும், இதில் கீர்த்தி மற்றும் அந்தோணியின் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம்.

கீர்த்தியின் திருமணம் குறித்த தகவல் வெளியானதில் இருந்து, அவரை திருமணம் செய்ய உள்ள அந்தோணி தட்டில் யார்? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தை ஜல்லடை போட்டு ஜலித்து வருகின்றனர்.

36
Keerthy suresh and Antony Thatil

சரி கீர்த்தியின் 15 வருட காதலர் அந்தோணி யார் என்பதை பார்ப்போம், "கேரள மாநிலத்தை சேர்ந்த அந்தொட்டி தட்டில், தற்போது கொச்சி மற்றும் துபாயில் வலுவான பின்னணியுடன் ஒரு தொழிலதிபராக உயர்ந்துள்ளார். கைபாலத் ஹபீப் ஃபரூக்குடன் சேர்ந்து, சென்னையில் பதிவுசெய்யப்பட்ட ஆஸ்பெரோஸ் விண்டோ சொல்யூஷன்ஸின் முதன்மை உரிமையாளராக உள்ளார். இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணத்தில் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

கீர்த்தி துறுதுறுவென இருக்கும் பெண் என்றாலும், அந்தோணி அப்படியே அவருக்கு எதிரானவர். மிகவும் அமைதியான நபராம். ஒரு போதும் கீர்த்தியின் ஆசைக்கு அவர் எந்த விஷயத்திலும் தடையாக இருந்தது இல்லையாம். 

46
Keerthy Suresh Marry to Collage Frient

பள்ளி நாட்களில் இருந்து, கீர்த்திக்கு ஒரு நல்ல நண்பர்களாக இருந்த இருவரும்...  கொச்சியில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தபோது தங்களின் நட்பை, காதல் என்கிற அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பல ஆண்டுகளாக, இந்த ஜோடி தங்களின் காதலை ரகசியமாக வைத்திருந்த நிலையில், இதுவரை எந்த இடத்திலும் வெளிப்படுத்தவில்லை.  கீர்த்தி - அந்தோணியின் 15 வருட காதலுக்கு இருவீட்டு பெற்றோரும், தற்போது சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்களுடைய காதல் திருமணத்தில் கைகூட உள்ளது. 
 

56
Keerthy Suresh Family

நடிகை கீர்த்தி சுரேஷ், தென்னிந்திய திரையுலகில் தேசிய விருது நடிகை என்கிற பெருமையை பெற்றுள்ள நிலையில், பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் சுமன் குமார் இயக்கத்தில், தமிழ் படமான ரகு தாதாவில் வெளியானது. பேபி ஜான் திரைப்படம் டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.
 

66
Child Artist Keerthy Suresh

வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிகை மேனகா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமாரின் மகள் ஆவார். 2000 களின் முற்பகுதியில், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய கீர்த்தி சில ஆண்டுகளுக்குப் பிறகு, திரைப்படங்களில் மீண்டும் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.  கீதாஞ்சலி, படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான SIIMA விருதையும் வென்றார். பின்னர் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories