கொட்டை பாக்கில் கொட்டி கிடக்கும் நன்மைகள்...!

First Published | Feb 18, 2023, 12:39 PM IST

கொட்டைப்பாக்கில் எல்லையில்லா நன்மைகள் உள்ளன. 

கொட்டைப்பாக்கில் எல்லையில்லா நன்மைகள் உள்ளன. அதனால் தான் முன்னோர் இதனை வெற்றிலையுடன் சேர்த்து உண்டு வந்தனர். இன்றும் சுபவிஷேசங்களில் கொட்டை பாக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதனுடைய தனித்துவமான நன்மைகளை இங்கு காணலாம். 

கொட்டைப் பாக்கு எடுத்து கொள்ளும்போது கோழைமலம், இரைப்பையில் உள்ள கிருமிகள் நீங்கும். ஆனால் அதிகம் உண்ணக் கூடாது. இது சோகை வர காரணமாக இருக்கலாம். கொட்டை பாக்கை தூளாக்கி பல் துலக்கினால் பற்கள் உறுதியாகிவிடும். 

Latest Videos


நமக்கு நோய்கள் ஏற்பட உடலில், வாதம் பித்தம் சீராக இல்லாமல் இருப்பது ஒரு காரணமாகும். வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் சேர்த்து உண்ணும்போது  பித்தம், வாதம் கட்டுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது. பாக்கில் உள்ள துவர்ப்பு சுவை பித்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சுண்ணாம்பில் இருக்கும் காரம் வாதத்தை போக்குமாம். வெற்றிலை கபத்தை நீக்கும். ஆனால் அளவாக மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். 
 

கணவன் மனைவி உறவில்  நெருக்கம் ஏற்பட கூட பாக்கு உதவுகிறது தெரியுமா? ஆம் உண்மைதான். கொட்டைப்பாக்கு, கானா வாழைக் கீரை ஆகியவை சேர்த்து அரைத்து உண்பதால் தாம்பத்தியம் நன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. 

பாக்கில் தயார் செய்யப்படும் டீ சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. அசிடிட்டி, வாயு தொந்தரவு, கொலஸ்ட்ரால் ஆகிய பிரச்சனைகளுக்கும் இந்த டீ நல்ல பலனளிக்கிறது. ஆனால் பாக்கு அடிக்கடி எடுத்து கொள்ளக் கூடாது. இதில் சில பக்க விளைவுகளும் உண்டு. 

click me!