வாக்கிங் vs ரன்னிங்  vs ஜாகிங்; எந்த வயசுக்கு எதை செய்யனும் தெரியுமா? 

ரன்னிங், வாக்கிங், ஜாகிங் இவற்றில் வயதுக்கேற்ப எந்த பயிற்சியினை செய்ய வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம்.

Jogging vs Running vs Walking Which is best according to different age in tamil  mks

Jogging vs Running vs Walking - What's Best for Your Age Group? எந்த உடற்பயிற்சியை செய்தாலும் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இப்போது மக்களிடையே வாக்கிங் செல்வது பரவலாகி வருகிறது. வயதானவர்கள் என்றாலே வாக்கிங் செல்வார்கள் என்பது போன்ற பிம்பமும் உருவாகி வருகிறது. உண்மையில் நாம் செய்யும் பயிற்சிக்கும் வயதுக்கும் சம்பந்தம் உண்டுதான் என்றாலும் வயதானவர்கள் வாக்கிங் மட்டும்தான் செல்ல வேண்டும் என்றில்லை. இந்த பதிவில் ரன்னிங், வாக்கிங், ஜாகிங் இவற்றில் வயதுக்கேற்ப எந்த பயிற்சியினை செய்ய வேண்டும் என காணலாம். 

Jogging vs Running vs Walking Which is best according to different age in tamil  mks
வயது 6-18:

குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் அந்த வயதுக்கேற்ப உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். வளரும் பருவத்தில் அவர்களுக்கு இருக்கும் உயர் ஆற்றல் அளவுகள் அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இந்த வயதில் ரன்னிங் சிறந்த பயிற்சியாக இருக்கும். அவர்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, உடலை வலுப்படுத்த உதவுகிறது.


வயது 19-40:

பதின்பருவத்தைக் கடந்தவர்கள் ஜாகிங் பயிற்சியை செய்யலாம். இதனால் அவர்களுக்கு சுறுசுறுப்பு, உடலில் சகிப்புத்தன்மை ஆகியவை ஏற்படும். உடலில் சமநிலையை ஏற்படுத்தக் கூடிய பயிற்சியாக இருக்கும்.  உடலை தீவிரமாக செயல்படுத்தாமல் நல்ல பயிற்சியாக அமையும். எடை குறைப்புக்கு சிறந்தது.

இதையும் படிங்க: 'வெறுங்காலில்' வாக்கிங் போவது நல்லதா? இந்த விஷயத்தை கவனிங்க

வயது 41-60:

நடுத்தர வயது பெரியவர்கள் நடைபயிற்சி செய்வது நல்லது. அவர்களுடைய மூட்டுகள் முதுமையின் காரணமாக தேய்மானம் அடைந்திருக்கலாம். மென்மையாக மாறிவிடும். தேவையில்லாத காயங்களை குறைக்க, ஆரோக்கியத்தைப் பேண நடைபயிற்சி சரியானதாக அமைகிறது. 

இதையும் படிங்க:  காலைல வாக்கிங் போறவங்க கண்டிப்பா '1' முட்டை சாப்பிடனுமாம்!! ஏன் தெரியுமா?

வயது 60க்கு மேற்பட்டோர்:

இந்த வயதில் நடைபயிற்சியே சிறந்த பயிற்சியாக இருக்கும். இதய ஆரோக்கியம், உடலுக்கு சமநிலை, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.  நடைபயிற்சி செய்வதால் உடல் இயக்கம் நன்றாக இருக்கும். 

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் (வயது அடிப்படையில்லை):  கர்ப்பிணிகளுக்கு நடைப்பயிற்சி பாதுகாப்பான பயிற்சியாக இருக்கும்.  உடலின் அழுத்தத்தைக் குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடப்பது நல்ல தேர்வாகும்.  கர்ப்பகாலங்களில் ஏற்படும் மனநிலை மாற்றங்களை சீராக வைத்திருக்க நடக்கலாம்.

Latest Videos

vuukle one pixel image
click me!