தோல் பிரச்சினைகளை குறைக்கும் : சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இது தோல் பிரச்சினைகளை விரைவாக குறைக்க உதவுகிறது. முக்கியமாக தேங்காய் எண்ணெய் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் வறட்சி மற்றும் தடித்தலை குறைக்கும்.
சருமத்தை ஈரப்பதமாக வைக்கும் : தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்தை வழங்குகிறது. இந்த எண்ணெயில் பல வைட்டமின்கள், வலி நிவாரணி, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கின்றது. முக்கியமாக குளிர் காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்க உதவுகிறது.
வயதாவதை மெதுவாக்கும் : தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள், சரும பிரச்சினைகளைக் குறைத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமம் வறண்டு போவதை மெதுவாக்குகிறது.