Homemade Papaya Face Pack For Glowing Skin : பப்பாளி ஆரோக்கியமான பழங்களின் பட்டியலில் ஒன்றாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சரும ஆரோக்கியத்தை பற்றி பேசினால் பப்பாளி சருமத்திற்கும் நன்றாக வேலை செய்யும். இதில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.
25
பப்பாளியை சாப்பிடுவதை தவிர அதை ஃபேஸ் பேக்காக முகத்தில் போடலாம். பப்பாளி ஃபேஸ் பேக் சருமத்திற்கு பளபளப்பை கொடுப்பது மட்டுமின்றி இறந்த செல்களில் அகற்றவும், துளைகளை திறக்கவும், முகப்பருவை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. இப்போது வீட்டில் தயாரிக்கப்பட்ட சில பப்பாளி பேஸ் பேக் பற்றி இங்கு பார்க்கலாம்.
35
பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்:
பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் பப்பாளியை மசித்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி பத்து நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் பப்பாளி மசித்து கொள்ளுங்கள். அதில் சந்தன பொடி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் தயாரிக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வாழைப்பழம், வெள்ளரிக்காய் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்:
வெள்ளரிக்காய் மற்றும் வாழைப்பழம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். வெள்ளரிக்காய் சிறிய துண்டுகளாக வெட்டி பப்பாளி மற்றும் வாழைப்பழத்துடன் மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல் தயாரிக்கவும். அந்த பேஸ்ட்டை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.