முகத்தின் சுருக்கங்களை நீக்குவது இவ்வளவு சுலபமா? தேன் பேஸ் பேக் டூ முட்டை வரை
உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி நீண்ட காலம் இளமையாகவும் அழகாகவும் இருக்க விரும்பினால் இந்த 5 பேஸ் பேக்குகளில் ஒன்றை பயன்படுத்துங்கள்.
உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி நீண்ட காலம் இளமையாகவும் அழகாகவும் இருக்க விரும்பினால் இந்த 5 பேஸ் பேக்குகளில் ஒன்றை பயன்படுத்துங்கள்.
Homemade Face Packs For Wrinkles : யாருக்குதான் அழகாக இருக்க விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக பெண்களை பற்றி சொல்லவா வேண்டும். தங்களது முகம் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 30 வயதிற்கு பிறகு சருமத்தை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சியின்மை, மோசமான உணவு முறை மற்றும் மன அழுத்தம் கொஞ்சம் பல காரணங்களால் இளம் வயதிலேயே சருமத்தில் வயதான தோற்றம் தோன்றத் தொடங்குகிறது. எனவே சருமத்திற்கு சிறப்பு கவனம் தேவை. வறட்சி, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், தொய்வுற்ற சருமம் போன்றவை வயதானதற்கான அறிகுறிகளாகும். எனவே இந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்காமல், சரியான நேரத்தில் சருமத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சருமத்தை வயதாகாமல் பாதுகாக்கலாம். அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தேன் மற்றும் அஸ்வகந்தா நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும் இது அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜன் பண்புகளை கொண்டிருப்பதால் சுருக்கங்களை குறைக்க பெரிதும் உதவும். இதற்கு ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அஸ்வகந்தா பொடி, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளை குரு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதை உங்களது முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவ வேண்டும். இந்த சைஸ் பேக் சுருக்கங்களை மட்டுமின்றி, பல்வேறு சரும பிரச்சனைகளையும் நீக்கும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போட வேண்டும். 15 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். முட்டையின் வெள்ளைக்கரு சுருக்கங்கள் மற்றும் தொடர்பான சருமத்தை குறைக்க உதவும். எலுமிச்சை சாறு சருமத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்தும்.
இதற்கு இரண்டு ஸ்பூன் அரைத்த ஓட்ஸில், ரெண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து அதை ஃபேஸ் பேக்காக முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். ஓட்ஸ் சருமத்தை மென்மையாக்கும். தயிரில் லாட்டிக் அமிலம் இருப்பதால், இது சருமத்தை உரித்து ஹைட்ரேட் செய்யும்.
இதையும் படிங்க: தேங்காய் எண்ணெயில் '1' ஸ்பூன் தேன் கலந்து யூஸ் பண்ணுங்க.. முக சுருக்கம் மறையும்!
நன்கு பழுத்த வாழைப்பழத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, நன்கு காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாழைப்பழத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை ஊட்டமளித்து ஈரப்பதமாக வைக்க உதவும்.
இதையும் படிங்க: 35 வயசுக்கு மேலயும் இளமையாக தெரிய ஆசையா? இதை செஞ்சா போதும் பள பள பளனு இருப்பீங்க
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து மென்மையான பேஸ்ட் போலாக்கி, பிறகு அதை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு, பிறகு தண்ணீரில் கழுவவும். சிறந்த முடிவுக்கு இந்த பேஸ் பேக்கை 2 வாரம் போடுங்கள்.