ஆண்களே! வெயில் காலத்தில் முகம் பளபளக்க இதை செய்ங்க!
இந்த கோடை வெயில் தாக்கத்தில் இருந்து ஆண்கள் தங்களது சருமத்தை பாதுகாப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்த கோடை வெயில் தாக்கத்தில் இருந்து ஆண்கள் தங்களது சருமத்தை பாதுகாப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
Best Men's Skin Care Tips For Summer : பொதுவாக சரும பராமரிப்பு அழகு என்றாலே பெண்களுக்கு மட்டுமே என்று நினைப்பது தவறானது. மேலும் இந்த மனப்பான்மை இப்போது மாறத் தொடங்கி இருக்கிறது. அதனாலே என்னவோ மார்க்கெட்டுகளில் ஆண்களுக்கான சரும பராமரிப்பு பொருட்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. உண்மையில் சருமத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் குறிப்பாக ஆண்கள் வெயில் காலத்தில் தங்களுடைய சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். எனவே கோடைகாலத்தில் ஆண்கள் தங்களுடைய சருமத்தை வெயிலின் தாக்கத்திலிருந்து எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்த சீசனில் வழக்கத்தை விட ரொம்பவே அதிகமாக வியர்க்கும். எனவே முகத்தை கண்டிப்பாக க்ளன்சிங் செய்ய வேண்டும். இதற்கு உங்களுடைய சரும வகைக்கு ஏற்ப ஃபேஸ்வாஷ் பயன்படுத்தி நன்கு சுத்தம் செய்யுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை யாவது கண்டிப்பாக ஃபேஸ் வாஷ் வைத்து முகத்தை கழுவ வேண்டும். இது தவிர மிதமான சூட்டில் இருக்கும் நீரால் அவ்வப்போது முகத்தை கழுவுங்கள். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் சுத்தமாக்கப்பட்டு சருமம் தூய்மையாக இருக்கும்.
மாய்ஸ்சரைசர்
வெயிலின் தாக்கத்தால் சருமம் சீக்கிரமாகவே வறண்டு விடும். எனவே சருமத்தை வறட்சி இல்லாமல் எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது ரொம்பவே முக்கியம். இதற்கு நீங்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். ரொம்பவே திக்காக இல்லாமல் வாட்டர் டேஸ்ட் போல் இருக்கும் மாய்ஸ்ரைசர் பயன்படுத்துவது இன்னும் நல்லது.
ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக வெயில் காலத்தில் சன் ஸ்கிரீன் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் நீங்கள் ஸ்கிரீன் பேஸ்ட் போல் இருக்கும் சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம். அதுவே உங்களுக்கு ஆயில் ஸ்கின் என்றால் ஜல் பேஸ்ட் போல் இருக்கும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சன் ஸ்கிரீன் உங்களது சருமத்தை சூரிய ஒளி தாக்கத்திலிருந்து பாதுகாக்கும். முக்கியமாக, உங்களது சருமத்தின் நிறம் மாறாமால் இருக்கும்.
எக்ஸ்ஃபோலியேட்
எக்ஸ்ஃபோலியேட் பெண்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் கட்டாயம் தேவைதான். பொதுவாக ஆண்கள் சருமத்தை பராமரிக்க மாட்டார்கள். இதன் காரணமாக சருமத்தில் இறந்த செல்கள் நீங்காமல் அப்படியே இருக்கும். இதனால் சருமத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். எனவே அவற்றை நீக்க நீங்கள் அரிசி மாவு அல்லது காபி ஸ்கிரப் கொண்டு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஸ்கிரப் செய்து, எக்ஸ்ஃபோலியேட் செய்வது ரொம்பவே நல்லது.
சுட்டெரிக்கும் கோடை காலத்தில் கண்டிப்பாக இரண்டு முறை குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உடல் சூடு தணியும். அதுமட்டுமில்லாமல் வெயிலால் ஏற்படும் அதிகப்படியான வியர்வை, அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.
உதடு பராமரிப்பு
வெயிலின் தாக்கத்தால் சருமம் மட்டுமின்றி உதடும் வறட்சியாகும். எனவே உங்களது உதட்டை நீரேற்றுமாக வைக்க லிப் பாம் பயன்படுத்துங்கள். இல்லையெனில் வாஸ்லின் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: ஹேண்ட்ஸ்சம் பாய்ஸ் லுக் வேண்டுமா? இந்த 5 விசயங்களை மிஸ் பண்ணாதீங்க!!
வெயில் காலத்தில் நீங்கள் ரிம்மர் மற்றும் ஹாட்டான ஸ்க்ரீன் கொண்டு சேவ் செய்தால் சருமத்தில் எரிச்சல் ஏற்படும். அதற்கு பதிலாக கூலிங்காக இருக்கும் கிரீம் சந்தையில் விற்பனையாகின்றன. அவற்றை பயன்படுத்தி ஷேவ் செய்து பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள். சருமம் மென்மையாக இருக்கும்.
நினைவில் கொள் :
மேலே சொன்ன எல்லாவற்றையும் விட கோடைகாலத்தில் ஆரோக்கியமான டயட் பின்பற்றுவது ரொம்பவே முக்கியம். இதற்கு நீங்கள் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிடுங்கள். மேலும் ஊறவைத்த உலர் திராட்சை மற்றும் அதன் நீரை குடித்து வந்தால் சருமம் எப்போதுமே பளபளப்பாக இருக்கும்.
இதையும் படிங்க: ஆண்களே கொரியன்ஸ் போல உங்க முகம் பட்டு போல மாற '5' டிப்ஸ்