வெயில்ல முகம் கருக்குதா? இந்த மாதிரி கடலை மாவு பேஸ் பேக் போடுங்க!! 

Published : Mar 18, 2025, 07:09 PM ISTUpdated : Mar 18, 2025, 09:29 PM IST

கோடை வெயிலில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க கடலை மாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

PREV
15
வெயில்ல முகம் கருக்குதா? இந்த மாதிரி கடலை மாவு பேஸ் பேக் போடுங்க!! 

Tips for Using Gram Flour in Your Summer Skin Care Routine : கோடைகாலம் ஆரம்பமாகி விட்டதால், வெயிலின் தாக்கம் நம்மை வாட்டி வதைக்கிறது. இந்த சீசனில் சருமத்தை சரியாக பராமரிக்காவிட்டால் வெயிலின் தாக்கத்தால் பல சரும பிரச்சினைகள் வரும். குறிப்பாக சருமம் கறுத்துப் போகும். இவற்றில் இருந்து தப்பிக்க கடலை மாவு பெரிதும் உதவும். ஆம், கடலை மாவு நம் சருமத்தில் இருக்கும் அசுத்தங்களை சுத்தம் செய்து, சருமத்தை அழகாக மாற்ற உதவுகிறது. முக்கியமாக கடலைமாவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. 

25

சருமத்திற்கு கடலை மாவு பயன்படுத்துவதன் மூலம் அது சருமத்திற்கு ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், தொற்றுநோய் ஆகற்றவும் பெரிதும் உதவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த கோடை காலத்தில் வெயிலில் முகம் கறுத்துப் போகாமல் இருக்க கடலை மாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

35
கடலை மாவில் ஃபேஸ் பேக்:

ஒன்று..

ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் தேவையான அளவு தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட் கெட்டியாக இருந்தால் தான் அதன் தாக்கம் முகத்தில் வெளிப்படும். இப்போது, முதலில் உங்களது முகத்தை தண்ணீரால் நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள் பிறகு தயாரித்து வைத்த பேஸ்பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை இந்த ஃபேஸ் பேக் போடலாம்.

இதையும் படிங்க:  Summer Beauty Tips : வெயிலில் முகம் கருப்பாகாமல் பளிச்னு இருக்க 4 டிப்ஸ்!!

45
இரண்டு..

ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது முகத்தை சுத்தம் செய்து தயாரித்து வைத்த பேஸ் பேக்கை உங்களது முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இதையும் படிங்க:  ஒரே வாரத்தில் பருக்கள் நீங்க!!  இரவில் தூங்கும் முன் இந்த பேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!! 

55
கடலை மாவு ஃபேஸ் பேக் நன்மைகள்:

- இந்த ஃபேஸ் பேக் உங்களது முகத்தை பொலிவாக்க உதவும். மேலும் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.

- முகப்பருக்கள் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க இந்த ஃபேஸ் பேக் உதவுகிறது.

- அதுபோல இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்கி வறண்ட சருமத்தை ஈரப்பதமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும்.

- முகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி, இருந்து செல்களை நீக்கி முகத்தை பளபளப்பாக வைக்க இந்த பேஸ் பேக் உதவுகிறது.

- சூரிய ஒளியால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரி செய்ய இந்த ஃபேஸ் பேக் உதவுகிறது.

- முக்கியமாக கோடை வெயிலால் முகம் கருத்துப் போகாமல் பாதுகாக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories