கழுத்தில் கருமை நீங்க! தயிரை '1' ஸ்பூன் இப்படி யூஸ் பண்ணுங்க!!
இந்த பதிவில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கழுத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..
இந்த பதிவில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கழுத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..
Home Remedies For A Dark Neck : ஒவ்வொரு பெண்களும் சந்திக்கும் பல பிரச்சனைகளில் ஒன்று கழுத்தை சுற்றி இருக்கும் கருமைதான். ஆம் என்னதான் பெண்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் மற்றும் பேஷியல் செய்து அழகினாலும், கழுத்தை சுற்றி இருக்கும் கருமை அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது.
கழுத்து கருமையாக இருப்பதற்கு ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன் போன்ற பல காரணங்கள் உள்ளன. கழுத்து கருப்பாக இருப்பதால் பெண்கள் அசெளகரியமாக உணர்வதோடு மட்டுமல்லாமல், அவர்களது அழகையும் கெடுக்கிறது. இதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து கழுத்தின் கருமையை சுலபமாக நீக்கிவிடலாம். அது என்ன என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
உளுந்தம் பருப்பில் புரதம் அதிகமாகவே உள்ளன. மேலும் இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் பைபர், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 போன்ற பல சத்துக்கள் இருக்கிறது. இது அருகில் ரொம்பவே நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை வைத்து கழுத்தில் இருக்கும் கருமையை போக்க முடியும் தெரியுமா? அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க: மஞ்சள 'இத' கலந்து யூஸ் பண்ணுங்க.. கழுத்தில் உள்ள கருமை நீங்கும்..!
இதற்கு சிறிதளவு உளுந்தம் பருப்பை பாலில் ஊற வைக்கவும். உளுந்தம் பருப்பு நன்றாக ஊறியதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது வந்து பேஸ்ட்டை உங்களது கழுத்து, முகம் உள்ளிட்ட கருமை இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். இதனால் கருமை நீங்கி சருமம் பளபளக்கும் ஒரு வாரத்திலேயே நீங்கள் நல்ல பலன்களை காண்பீர்கள்.
இதையும் படிங்க: கருத்து இருக்கும் உங்கள் கழுத்து, கை, கால்களை வெறும் 5 நிமிடத்தில் வெள்ளையாக மாற்ற.. சிம்பிளான சூப்பர் டிப்ஸ்!
முதலில் தயிர் மற்றும் எலுமிச்சையை தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்களது கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, நன்கு காய்ந்ததும் கழுவி விடுங்கள். இதனால் கழுத்தில் உள்ள கருமை முற்றிலும் நீக்கிவிடும். பிறகு எலுமிச்சை சாற்றை பஞ்சின் உதவியுடன் நனைத்து கழுத்து பகுதியில் நன்றாக தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து சூடான நீரால் கழுத்தை கழுவ வேண்டும். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கழுத்தில் பகுதியில் உள்ள கருமை முற்றிலும் மறைந்துவிடும்.