தினமும் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா? எப்போது முட்டை கொடுத்தால் நல்லது?
குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுக்கலாமா? கூடாதா? எப்படி கொடுத்தால் நன்மை பயக்கும் என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுக்கலாமா? கூடாதா? எப்படி கொடுத்தால் நன்மை பயக்கும் என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Daily Egg Benefits for Kids Health : முட்டை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதனால் தான் தினமும் முட்டை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன அவை நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுக்கலாமா? அது அவர்களுக்கு நல்லதா? என்ற சந்தேகம் பல தாய்மார்களுக்கு உள்ளன. இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று இங்கு பார்க்கலாம்.
முட்டையில் இரும்புச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் பி6 போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக முட்டை குழந்தைகளின் மூளையை கூர்மையாக பெரிதும் உதவுகிறது.
ஆம், குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுப்பது அது அவர்களது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்கின்றனர் நிபுணர்கள். எனவே தினமும் குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
- முட்டையில் இருக்கும் புரதம் குழந்தையின் தசை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளதால், இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் காலை குழந்தைகளுக்கு ஒரு அவித்த முட்டையை சாப்பிடக் கொடுங்கள். இது அவர்களது பசியைக் கட்டுப்படுத்தும்.
- முட்டையில் இருக்கும் கோலின் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது குழந்தையின் ஞாபக சக்தி மற்றும் அறிவை அதிகரிக்க உதவுகின்றது. எனவே, உங்களது குழந்தையின் உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- முட்டையில் இருக்கும் வைட்டமின்கள் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக வைக்க உதவுகின்றது. காலை ஒரு அவித்த முட்டை குழந்தைக்கு கொடுத்தால் அது அவர்களது எலும்புகளை உருவாக்கும் மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- முட்டையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் குழந்தைகளின் கண் பார்வையை மேம்படுத்த உதவுகின்றது.
- முட்டையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவை உணவை எளிதில் ஜீரணமாக்க உதவுகின்றது மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கும். தினமும் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க தயங்க வேண்டாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டை கொடுப்பதுதான் நல்லது. வேண்டுமானால் ஆம்லெட், சாண்ட்விச் மற்றும் முட்டை பொரியல் போன்றவற்றையும் செய்து கொடுக்கலாம். குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளதால், குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம்.
இதையும் படிங்க: பெற்றோர்களே உங்கள் குழந்தையின் கூச்சத்தைப் போக்க சிம்பிள் டிப்ஸ் இதோ!!
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆறு மாதத்தில் இருந்து நன்கு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்கு கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் உணவில் முட்டை சேர்த்து வந்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக ஒவ்வாமை ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என்று கண்டறிந்துள்ளன. ஆனால், 1/4 ஸ்பூன் போன்ற சிறிய அளவில் தொடங்கி வேறு உணவுடன் சேர்த்துக் கொடுப்பது ரொம்பவே நல்லது. முக்கியமாக வாரத்திற்கு 2 முறைக்கு மேல் ஒரு போதும் கொடுக்கவே வேண்டாம்.
இதையும் படிங்க: குழந்தைங்க அமரும் 'பொசிஷன்' ரொம்ப முக்கியம்!! இப்படி உட்காந்தா கண்டிப்பா மாத்தனும்