தினமும் முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்குமா? ஆய்வில் புது தகவல்
தினமும் முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்குமா? இல்லையா? என்பதை இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.
தினமும் முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்குமா? இல்லையா? என்பதை இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.
Research on Daily Egg Consumption : முட்டை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நாம் அனைவரும் அறிந்தது. முட்டையில் கொலஸ்ட்ரால் உள்ளது. ஒரு நபர் ஆரோக்கியமாக ஒரு நாளைக்கு கண்டிப்பாக சாப்பிட வேண்டும். தினமும் முட்டை சாப்பிட்டால் பெரிய பிரச்சனை ஏதுமில்லை. ஏனெனில் மூட்டை நல்ல கொழுப்பை அளிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இத்தகை சூழ்நிலையில் தினமும் முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்குமா? என்று நிபுணர் ஒருவர் தன்னைதானே பரிசோதித்துக் கொண்டார். இதற்காக அவர் ஒன்றரை வருடங்களாக ஒரு நாளைக்கு நான்கு முட்டைகள் வாரத்திற்கு 28 முட்டைகள் என சாப்பிட்டு வந்தால் பிறகு அவர் சோதனையை மேற்கொண்டார்.
சோதனையின் முடிவில் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளில் எந்த மாற்றமும் இல்லை. நல்ல கொலஸ்ட்ரால் தான் அதிகரித்தது. எடையும் குறைந்து விட்டது. முட்டை சாப்பிடுவதோடு, அவர் தனது உணவு முறையிலும் மாற்றங்களை செய்தார். இதன் விளைவாக ஒன்றரை வருடத்தில் 12 கிலோ வரை எடை குறைந்து விட்டார்.
இதையும் படிங்க: காலைல வாக்கிங் போறவங்க கண்டிப்பா '1' முட்டை சாப்பிடனுமாம்!! ஏன் தெரியுமா?
முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமாகவே உள்ளது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் சுமார் 186 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. உடலுக்குள் நுழையும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் அதிகமாக மாறாது.
இதையும் படிங்க: வளரும் குழந்தைகளுக்கு காடை முட்டை.. நாட்டுக்கோழி முட்டையை மிஞ்சும் சத்து இருக்கு..
முட்டை சாப்பிட்ட பிறகு 70% மக்களில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. மீதமுள்ள 30 சதவீதத்தில் சற்று அதிகரித்தது. தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால் கொழுப்பு மற்றும் இதய நோய் அதிகரிக்குமா? என்ற கேள்வி கண்டிப்பாக இல்லையென்று தான் பதில் மேலும் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து முட்டை சாப்பிட்டு வந்ததால் அவர்களின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மாறவில்லை என்பது கண்டறியப்பட்டது.