காலைல வாக்கிங் போறவங்க கண்டிப்பா '1' முட்டை சாப்பிடனுமாம்!! ஏன் தெரியுமா?
காலை நடைபயிற்சிக்கு பின் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இங்கு காணலாம்.
காலை நடைபயிற்சிக்கு பின் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இங்கு காணலாம்.
Benefits Of Eating Eggs After Walking : காலை நடைப்பயிற்சி சென்று வந்த பின் ஒன்று அல்லது உங்கள் எடைக்கு ஏற்ற எண்ணிக்கையில் முட்டையை சாப்பிடுவது நல்லது. உதாரணமாக நீங்கள் 30 கிலோ எடை உடையவராக இருந்தால் 5 முட்டைகளின் வெள்ளை கருவை உண்ணலாம். ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டாலும் நல்லது தான். நடைபயிற்சிக்கு பின் முட்டை சாப்பிடுவதால் நடக்கும்போது இயக்கத்திற்குட்பட்ட தசைகள் விரைவில் மீட்சி அடையும். காலையில் வேலைகளில் ஈடுபட புத்துணர்ச்சி கிடைக்கும். முட்டைகளில் உள்ள புரதம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். அதனால் தேவையில்லாத பசி குறையும்.
ஒரு முட்டையில் சுமார் 75 கலோரிகள் கிடைக்கும். முட்டையில் கார்போஹைட்ரேட்டுகள் இல்லை. கிட்டத்தட்ட 5 கிராம் கொழுப்பு, 6 கிராம் அளவில் புரதம், 0. 67 மிகி பொட்டாசியம், 70 மிகி சோடியம் உள்ளது. இது தவிர வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, வைட்டமின் ஆகியவையும், கால்சியம், துத்தநாகம் ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம் போன்ற தாதுச்சத்துகளும் உள்ளன.
இதையும் படிங்க: வாக்கிங் தான் உங்க உடற்பயிற்சியா? அப்ப இந்த '4' விஷயங்களை கண்டிப்பா கவனிங்க!!
காலை நடைபயணம் சென்று வீடு திரும்பிய பின்னர் முட்டைகளை உண்பதால் வளர்சிதை மாற்றம் மேம்படும். காலையில் நடப்பதால் அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு பசி அதிகமாக எடுக்கும். அதைக் குறைக்க முட்டை எடுக்கலாம். எப்போதும் காலை உணவில் உடலுக்கு தேவையான புரதச்சத்தில் 60% புரதம் உள்ளவாறு சாப்பிட நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது அந்த நாளை உற்சாகமாக்க உதவும். அப்படி உண்பதால் நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இதற்கு முட்டை உண்பது நல்ல தேர்வாக இருக்கும். இனிப்பு பண்டங்கள், சிப்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணத் தூண்டும் சின்ன பசியை முட்டை உண்பது குறைக்கும்.
இதையும் படிங்க: 'வெறுங்காலில்' வாக்கிங் போவது நல்லதா? இந்த விஷயத்தை கவனிங்க
முட்டைகளில் காணப்படும் புரதம் நடைபயிற்சிக்கு அல்லது உடற்பயிற்சிக்கு பின் தசை திசுக்களை சரிசெய்யவும், மீண்டும் உருவாக்கவும் தேவைப்படுகிறது. நடைபயிற்சி செய்த சில மணி நேரங்களுக்குள் முட்டை போன்ற புரத உணவுகள் உண்பது தசை புரதத் தொகுப்பை மேம்பாடு அடைய செய்யும். தசை வலிமைக்கு நல்லது.
காலை உணவை மூளை உணவு என்பார்கள். ஏனென்றால் அவை மூளைக்கு ஆற்றல் அளிப்பவை. முட்டையில் உள்ள கோலின் மூளை ஆரோக்கியத்திற்கு அவசியம். கோலின் நினைவாற்றல், மனநிலை, புத்திசாலித்தனம் போன்றவற்றை மேம்பாடு அடைய செய்ய உதவுகிறது. காலை உணவில் கண்டிப்பாக முட்டை உண்பது நல்லது.