- ஆரோக்கியமான வாழ்க்கை முறை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நல்ல தூக்கம் அவசியம். குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஒரு வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் மிதமான உடற்பயிற்சி செய்தாலே போதும். திரைப்படங்களில் வருவது போல சிக்ஸ் பேக், சைஸ் ஸீரோ போன்ற மாயைகளில் இளைய தலைமுறை சிக்கக் கூடாது. போதிய தூக்கமில்லாத தீவிர உடற்பயிற்சி மாரடைப்பு வர காரணமாக அமையலாம். உடற்பயிற்சி செய்பவர்கள் அவ்வப்போது சுகாதார நிபுணர்களிடம் ஆலோசிப்பது நல்லது.
- 25 வயதுக்கு மேற்பட்டோர் கெட்டக் கொழுப்பு பரிசோதனையை செய்து பார்க்க வேண்டும். உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்பின் அளவை பொறுத்து உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். மருத்துவரிடம் ஆலோசித்து மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு இருப்பின் இளம் வயதிலேயே உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்த வேண்டும். இதனால் கெட்டக் கொழுப்பை குறைக்கலாம். இதய ஆரோக்கியமும் மேம்படும்.