நடைபயிற்சி அனைத்து வயதினரும் செய்யக் கூடிய எளிய பயிற்சியாகும். எந்த உபகரணமும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் செய்யலாம். எடை இழப்புக்கு செய்பவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒரு மாற்றம் எடை இழப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.
எடை குறைய நடைபயிற்சி சிறந்த பயிற்சியாக இருக்கும். இது ரன்னிங், ஹிட் போன்ற அதிக தீவிர இடைவெளி பயிற்சிகளைப் (HIIT) போல பசியை அதிகரிக்காது. அதிதீவிர பயிற்சிகள் உடலுக்கு அதிக ஆற்றலை கோரும். இதனால் அதிகப்படியான பசி ஏற்படும். நடைபயிற்சி அப்படியானதல்ல. குறைந்த ஆற்றலை பயன்படுத்துவதால் உடலை சரிசெய்ய அதிக உணவு உண்ணத் தேவையில்லை. இது எடை குறைய நல்ல பயிற்சியாக இருக்கும்.