தினமும் 2200 காலடிகள் கட்டாயம் நடக்கனும்? இந்த காரணம் தெரியுமா? 

னமும் 2,200 காலடிகள் நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Health Benefits of Walking 2200 Steps : இந்த காலகட்டத்தில் பலரும் அமர்ந்த இடத்திலேயே வேலை செய்யும் வாழ்க்கை முறையை தான் கொண்டிருக்கிறார்கள்.  இதனால் அவர்களுடைய உடலில் செயல்பாடு என்பது குறைவாகிவருகிறது.   

Benefits of Walking

ஒருவர் சாதாரணமாக ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது தன்னை ஏதாவது ஒரு உடற்செயல்பாடுடன் ஈடுபடுத்திக் கொள்வது அவருடைய ஆயுளை நீட்டிக்க உதவும். அதிலும் நடைபயிற்சி மிதமான பயனுள்ள பயிற்சியாகும். நாள்தோறும் 2200 காலடிகள் நடப்பதால் நீண்ட ஆயுள் மட்டுமல்ல பல்வேறு ஆரோக்கியம் நன்மைகளும் கிடைக்கும். அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 


Benefits of Walking

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் செய்த ஆய்வில் நாள்தோறும் 2,200 காலடிகளுக்கு அதிகமாக நடப்பது இதய நோய் ஆபத்தை குறைக்கும். இறப்புக்கான அபாயமும் கணிசமாகக் குறைக்கப்படும் என தெரிய வந்துள்ளது. நாள்தோறும் 9000 முதல் 10,500 காலடிகள் நடப்பது கூடுதல் நன்மைகளை கொண்டுள்ளது. நடைப்பயிற்சி தொடர்ந்து செய்யப்படும் போது உடலில் நேரடியான மாற்றங்களை நம்மால் உணர முடியும். 

இதையும் படிங்க:  நடைபயிற்சி முடிந்ததும் '1' கிளாஸ் தண்ணீர் குடிக்கனுமா? இந்த காரணம் புதுசா இருக்கே!!

Benefits of Walking

ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளில் நடைபயிற்சி மனநிலை சீராவதுடன் தொடர்புடையது. இதய ஆரோக்கியம் மேம்படும்.  நடைப்பயிற்சி எளிமையானது. அனைத்து வயதினராலும் செய்ய முடியும். அமர்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன்களை உடையது. அதிக நேரம் அமர்ந்திருப்பது உடல் செயல்பாடுகளின் நன்மைகளை தடுக்கும். நீங்கள் அதிமாக நடந்தாலும் நீண்ட நேரம் நடப்பது உடல் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றங்களை நிகழ்த்தாது.  

இதையும் படிங்க:  தினமும் '15' நிமிடங்கள்  வாக்கிங்; இப்படி நடந்தா அத்தனை நன்மை இருக்கு!! 

Benefits of Walking

உடலின் ஆரோக்கிய நன்மைகளை மேம்படுத்த  ஆராய்ச்சியாளர்கள் அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறைக்க வலியுறுத்துகின்றனர். உதாரணமாக 1 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை விட 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடக்கலாம். இப்படி நடப்பதை அதிகப்படுத்தும்போது அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் இருப்பதன் எதிர்மறை விளைவுகள் குறையும்.

Latest Videos

click me!