தவறான நேரத்தில் 'வாக்கிங்' ஆபத்து!! கோடைகாலத்தில் எப்போது நடக்கனும் தெரியுமா? 

கோடைகாலத்தில் எப்போது நடைபயிற்சி செல்வது நல்லது என இந்தப் பதிவில் காணலாம். 

Details on right time to walk in summer in tamil mks
Walking Tips

Details On Right Time To Walk In Summer : அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி செல்வது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும் என சொல்லப்படுகிறது. உண்மையில் நடைபயிற்சி மிதமான உடற்பயிற்சியாகும். இதற்கு குறைந்த அளவிலான ஆற்றலே பயன்படுத்தப்படும்.  மற்ற உடற்பயிற்சிகளை செய்ய விரும்பாதவர்கள், ஜிம்மிற்கு போக முடியாதவர்கள் நடைபயிற்சியை மேற்கொள்வது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆனால் கோடைகாலத்தில் எப்போது நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தவறான நேரத்தில் நடைபயிற்சி செய்வது உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

Details on right time to walk in summer in tamil mks
Walking in Summer

கோடைகாலம்: 

கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இதனால் காற்றிலும் வெப்பநிலை அதிகமாக காணப்படும். இது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தவறான நேரங்களில் நடைபயிற்சி செய்தால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமின்றி சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள் கோடையில் எப்போது நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 


Best Time Walking in Summer

கோடையில் நடைபயிற்சி செல்ல சரியான நேரம்? :

கோடைகாலத்தை பொருத்தவரை அதிகாலையில் நடைபயிற்சி செல்ல வேண்டும். காலையில் சீக்கிரமே எழுந்து 5 மணி முதல் 7:30 வரையில் நடைபயிற்சி செல்ல ஏற்ற நேரமாகும். இந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்.  வெப்பநிலை குறைவாக இருப்பதால் உடலில் நீரிழப்பும் குறைவாகவே ஏற்படும். உங்களால் காலையில் நடைபயிற்சி செல்ல முடியாவிட்டால் மாலையில் நடக்கலாம்.  

Evening Walking in Summer

மாலை வாக்கிங்: 

உங்களால் காலையில் எழுந்து நடக்க செல்ல முடியாவிட்டால் மாலையில் நடைபெறுச்சு செய்யலாம் சூரிய சூரியன் மறைந்த பிறகு நடைபெறுகிறது நீர் இழப்பு ஏற்படுவது தடுக்க உதவும் மாலை வேளையில் காற்றில் குளிர்ச்சி அதிகமாகும் அதனால் நடப்பதற்கு வசதியாக இருக்கும். 

இதையும் படிங்க:  தினமும் 2200 காலடிகள் கட்டாயம் நடக்கனும்? இந்த காரணம் தெரியுமா? 

Right Time Walking in Summer

எப்போது நடக்கக் கூடாது? 

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கண்டிப்பாக நடக்க செல்லக் கூடாது. இந்த வேளையில் உலில் படும் சூரிய ஒளி உடல்நலனுக்கும்,  சருமத்திற்கும் நல்லதல்ல. 

இதையும் படிங்க:  வெறும் '5' நிமிட வாக்கிங் போதும்!! இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! 

Walking Tips in Summer

கோடைகால வாக்கிங் டிப்ஸ் : 

- கோடை காலத்தில் நீங்கள் நீண்ட தூரம் நடப்பதால் உடல் நீரிழப்பு அதிகமாக ஏற்படும். அதனால் குறைவான தூரத்தை நடப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நடக்கச் சொல்லும் முன்பும் நடந்து முடித்து வீடு திரும்பிய பின்பும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை அணிவது உங்களுக்கு சரும பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும். 

- நடக்கும் போது உங்களுக்கு பலவீனமான உணர்வு ஏற்பட்டாலும், உடலில் ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் தோன்றினாலும் நடப்பதை நிறுத்துவது அவசியம். நடந்து முடித்த பிறகு குளிப்பது புத்துணர்ச்சியாக உணர செய்யும். 

Benefits of Walking in Summer

கோடையில் நடைபயிற்சி நன்மைகள்: 

கோடைகாலத்தில் தினமும்  நடைபயிற்சி செய்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.  இதய ஆரோக்கியம் மேம்படும். இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்புகள் குறையும். மனநிலை சீராக இருக்கும்.

Latest Videos

vuukle one pixel image
click me!