
Sugarcane juice: Are there so many benefits to the body from drinking it during summer? : கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த சீசனில் அதிகரித்து வரும் வெப்பநிலையுடன் நமது உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது ரொம்பவே முக்கியம். இதற்காக சந்தையில் பலவிதமான குளிர்பானங்கள் விற்பனையாகின்றனர். ஆனால், அவை ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். எனவே அவற்றை விட சிறப்பு வாய்ந்தது கரும்புச்சாறு தான். இது குடிப்பதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி, பல ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு வழங்கும். எனவே, இந்த இந்த பதிவில் கோடை காலத்தில் கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கரும்பு சாறில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்: இதில் புரதங்கள், வைட்டமின்கள், துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், கார்போஹைட்ரேட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்து நம்முடைய உடலுக்கு ஆற்றலை தருகின்றது.
இதையும் படிங்க: கரும்பு சாறு சருமம் மற்றும் கூந்தல் அழகிற்கு சிறந்ததா? இதன் உண்மை தன்மை என்ன?
கோடையில் கரும்பு சாறு குடிப்பதன் நன்மைகள்:
உடலுக்கு ஆற்றலை தரும் : கோடை காலத்தில் ஏற்படும் சோர்வு, பலவினத்தை நீக்க கரும்பு சாறு மிகவும் நன்மை பயக்கும். கோடை வெயிலுக்கு கரும்பு சாறு குடித்தால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். மேலும் உடல் சோர்வு நீங்கி மனநிலை மேம்படும். முக்கியமாக கரும்பு சாறு உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடல் சோர்வையும் குறைக்கும். காரணம், கரும்பு சாற்றில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளது.
ரத்த சோகை : ரத்த பற்றாக்குறையால் ஏற்படும் ரத்த சோகையை குணப்படுத்த கரும்பு சாறு பெரிதும். ஏனெனில் கரும்பு சாற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால், இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும். நீங்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்ந்து கரும்பு சாறு குடியுங்கள். அது உங்களுக்கு நன்மை பயக்கும்.
செரிமானத்திற்கு நல்லது : கரும்பு சாறு செரிமானத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இதில் பொட்டாசியம் உள்ளதால் இது வயிற்றின் பிஹெச் அளவை பராமரிக்கிறது மற்றும் செரிமான சாறுகளில் சுரப்பை எளிதாக்குகிறது. இது தவிர, இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
மஞ்சள் காமாலைக்கு நல்லது : கோடை காலத்தில் மஞ்சள் காமாலை நோயால் சிலர் பாதிக்கப்படுவார்கள். ஆனால், ஆயுர்வேதத்தின் படி, கரும்பு சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்த நிவாரணியாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: யாரெல்லாம் கரும்பு சாறு குடிக்க கூடாது தெரியுமா..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்: கரும்பு சாற்றில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பண்புகள் உள்ளன. எனவே, கோடையில் தினமும் கரும்பு சாறு குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பல நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
கல்லீரலுக்கு நல்லது: கரும்பு சாறு கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், கல்லீரலை நச்சு நீக்கம் செய்யவும் செயல்படுகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கல்லீரல் தொற்றுக்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது : கரும்பு சாறு குடித்தால் எலும்புகள் பலப்படும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இதில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்த உதவும். கரும்பு சாறு தினமும் குடித்து வந்தால் மூட்டுவலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பு : கரும்பு சாறு குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை வழங்கினாலும், உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது வேறு ஏதேனும் கடுமையான நோய் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குடிக்க வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.