வெறும் '5' நிமிட வாக்கிங் போதும்!! இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!
வெறும் 5 நிமிட நடைபயிற்சி எப்படி வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது என இந்தப் பதிவில் காணலாம்.
வெறும் 5 நிமிட நடைபயிற்சி எப்படி வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது என இந்தப் பதிவில் காணலாம்.
Why Five Minutes Walking is Important to Health : நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் நம் உடலும், மனமும் புத்துணர்வாக செயல்பட வேண்டும். காலை விழித்ததும் சோம்பல் முறித்துவிட்டு எழுந்து 5 நிமிடங்கள் நடந்தால் விறைப்புடன் இருக்கும் உடல் சற்று தளர்வாகும். பின் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த அந்த நாளை ஆரோக்கியமாகத் தொடங்க சரியான வழியாகும். இந்தப் பதிவில் வெறும் 5 நிமிட நடைபயிற்சியின் நன்மைகளை காணலாம்.
நீங்கள் ஒரே நேரத்தில் 30 முதல் 60 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. ஒவ்வொரு மணி நேரத்திலும் ஐந்து நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் கூட உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். நாள் முழுவதும் அமர்ந்த நிலையில் வேலை செய்பவர்கள், அதிக நேரம் அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை ஐந்து நிமிடங்கள் நடைபயிற்சி செல்வது அவர்களுடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க: தினமும் 2200 காலடிகள் கட்டாயம் நடக்கனும்? இந்த காரணம் தெரியுமா?
நாம் நாள்தோறும் செய்யக்கூடிய சிறிய விஷயம் கூட நம்முடைய உடலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடும் அதனால் உங்களுடைய நாளை ஒவ்வொரு ஒரு மணி நேரத்திலும் ஐந்து நிமிடங்களாவது நடப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் உங்களுடைய மேஜையில் இருந்து எழுந்து நிற்பது அல்லது ஐந்து நிமிடங்களுக்கு படிகளில் ஏறி இறங்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது உடலை ஆரோக்கியமாக பேண உதவுகிறது.
இதையும் படிங்க: தினமும் '15' நிமிடங்கள் வாக்கிங்; இப்படி நடந்தா அத்தனை நன்மை இருக்கு!!
இதை செய்வது எளிமையாக தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உங்களுடைய உடலை ஏதேனும் ஒரு செயல்பாட்டில் வைப்பது உங்களுடைய ஆயுளை அதிகரிக்க உதவும். உதாரணமாக 8 மணி நேரத்தில் உள்ள ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும் நீங்கள் 5 நிமிடம் சுறுசுறுப்பாக நடந்திருந்தால் அந்த நாள் முடியும் போது 40 நிமிடங்கள் நடந்திருப்பீர்கள். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். கெட்ட கொழுப்பு குறையும்.