வாக்கிங் போக சிறந்த நேரம் இதுவா!! காலை, மாலை, மதியம் எப்போது நடக்கலாம்? 

எந்த நேரத்தில் நடைபயிற்சி செல்வது உடலுக்கு எந்த மாதிரியான நன்மைகளை தரும் என இந்தப் பதிவில் காணலாம். 

Best time to walk in tamil mks

Best Time To Walk : எப்போது நடந்தாலும் ஒட்டுமொத்த உடலுக்கு நல்லது என்றாலும், சரியான நேரத்தில் நடப்பது வளர்சிதை மாற்றம், செரிமானம் உள்ளிட்ட நன்மைகளை தரும். ஒருநாளில் காலை, மாலை, மதியம், இரவு என எப்போது நடந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என இந்தப் பதிவில் காணலாம். 

Best time to walk in tamil mks
காலை வாக்கிங்:

காலையில் நடைபயிற்சி சென்றால் உடலில் ஆற்றல் நிலை மேம்படும். அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான புத்துணர்வு கிடைக்கும். வளர்ச்சிதை மாற்றம் அதிகரிப்பதால் எடையை  கட்டுப்படுத்த உதவுகிறது. மனநிலையை சீராக வைக்க காலைநேர நடைபயிற்சி உதவுகிறது. அதிகாலை நம்மீது படுகிற சூரிய ஒளி வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்கும். இதனால் எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு  சக்தி மேம்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் வேகமாக நடந்தால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும். 

இதையும் படிங்க:  வாக்கிங் vs ரன்னிங்  vs ஜாகிங்; எந்த வயசுக்கு எதை செய்யனும் தெரியுமா? 


மாலை வாக்கிங்:

காலையில் நடப்பதற்காக நேரத்தை ஒதுக்க முடியாதவர்கள் மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்யலாம். காலை நேரத்தில் கிடைக்கும் நன்மைகள் போலவே மாலை நேரத்திலும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். மனசோர்வை நீங்க செய்து மனநிலையை மேம்படுத்த மாலை நேர நடைபயிற்சி உதவுகிறது. சாப்பிட்ட பின்னர் நடப்பதால் செரிமானம் தூண்டப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு மாலை நேரம் நடைபயிற்சி செய்யலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மாலை நேர நடைபயிற்சி நல்ல தேர்வாக இருக்கும். உடலில் உள்ள பதட்டத்தை குறைத்து இலகுவாக உணர செய்வதால் இரவில் ஆழ்ந்த தூக்கம் ஏற்படும். தூங்க செல்வதற்கு முன்பாக நடப்பதை தவிர்க்க வேண்டும்.  இதனால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். 

இதையும் படிங்க:  காலைல வாக்கிங் போறவங்க கண்டிப்பா '1' முட்டை சாப்பிடனுமாம்!! ஏன் தெரியுமா? 

சாப்பிட்ட பின் வாக்கிங்:

சாப்பிட்ட பின்னர் குறுநடை போடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் இருக்க உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாப்பிட்ட பின் உடனடியாக தூங்கும் உணர்வை தடுக்க, சோம்பல் நீங்க நடைபயிற்சி உதவிகரமாக இருக்கும். வேகமாக நடப்பதை காட்டிலும் மிதமான வேகத்தில் மெதுவாக நடப்பது பரிந்துரைக்கப்படுகிறது.  இதனால் வயிற்றில் அதிக அழுத்தம் ஏற்படாமல் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. 
 

பிற்பகல் வாக்கிங்:

பிற்பகல் வாக்கிங் அதிக கவனம் பெறாத நடைபயிற்சியாகும். இதில் நம்பமுடியாத  நன்மைகள் இருக்கின்றன. மதிய நேரம்  உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இதனால் தசை செயல்திறன், சகிப்புத்தன்மை அதிகமாகும்.  அப்போது நடந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். அதிக கலோரிகள் எரிக்கப்படும். உட்காந்த நிலையில் வேலை செய்யும் நபர்களுக்கு மதிய நேர வாக்கிங் நல்லது. மதியம் நடப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலில் விறைப்பையும் தடுக்கிறது. பிற்பகலில் நடப்பது உடலின்  தூக்க-விழிப்பு சுழற்சியை சீராக மாற்ற உதவுகிறது.

Latest Videos

vuukle one pixel image
click me!