மும்பை ஃபபேமஸ் ரோட்டுக்கடை வடை பாவ் வீட்டில் செய்வது எப்படி?

மும்பையில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று வடை பாவ். ரோட்டோர கடைகளில் கிடைக்கும் இதை வீட்டிலேயே சுத்தமாக, ஆரோக்கியமாக செய்து பார்க்க வேண்டுமா? இதோ ரெபிசி மற்றும் விசேஷ டிப்ஸ்...
 

mumbai famous street food vada pav recipe
வடை பாவ் :

மும்பையின் ஸ்ட்ரீட் ஃபுட் கிங் என அழைக்கப்படும் வடை பாவ், உருளைக்கிழங்கு வடை மற்றும் மென்மையான பாவ் பனியுடன் சேர்த்த சுவையான உணவாகும். மிதமான காரத்துடனும், மணமான சுவையுடனும் இருக்கும் இந்த உணவு, ரோட்டு கடைகளில் முதல் தரமான உணவாக புகழ்பெற்றது. பலருக்கும் இது ஃபேவரைட் உணவாகும்.
 

mumbai famous street food vada pav recipe
தேவையான பொருட்கள்: வடைக்கு:

உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து மசித்தது)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கடலைமாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
நீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


பாவ் மற்றும் சட்னிக்கு:

பாவ் பனியான் - 4
பூண்டு சட்னி - 2 டீஸ்பூன்
மிளகாய் சட்னி - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

மேலும் படிக்க:கோழிக்கோடு பிரியாணி – மலபார் மண்ணின் மணம் மாறாத அதே சுவையில்
 

செய்முறை:

- வடைக்காக உருளைக் கிழங்கு கலவை தயாரிப்பதற்கு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பிறகு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி, சிறிய உருண்டைகளாக உருவாக்கி வைக்கவும்.
- வடையை பொரிப்பதற்கான மாவு தயாரிக்க ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து தடிமனாக பிசையவும்.
- தயாரித்த உருளைக்கிழங்கு உருண்டைகளை இதில் மூடிக்கொண்டு, கடாயில் சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

வடை பாவ் தயாரிக்கும் முறை :

- ஒரு தாவா (தட்டையான வாணலி) அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் தடவி, பாவ் பனியை இரு பக்கமும் மிதமான சூட்டில் வறுக்கவும்.
- வெந்த பாவ் பனியன் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் பூண்டு சட்னி மற்றும் மிளகாய் சட்னி தடவவும்.
- பொரித்த வடைவை நடுவில் வைத்து, மேலே நறுக்கிய வெங்காயம் சேர்த்து பரிமாறலாம்.
- தேநீர் அல்லது மசாலா சாயுடன் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்

மேலும் படிக்க:காரடையான் நோன்பு பிரசாதம் : கார அடை, இனிப்பு அடை செய்வது எப்படி?

விசேஷ குறிப்புகள்:

- வடை பாவ் மும்பையில் சிறப்பாக ரசிக்கப்படும் ஸ்ட்ரீட் ஃபுட் என்பதால், பாரம்பரிய முறையில் தயாரிக்கலாம்.
- மிதமான காரமாக சுவைக்க, சட்னியில் சிறிது கூடுதல் மிளகாய் சேர்க்கலாம்.
- பாவ் பனியை மென்மையாக வறுப்பதால், அதை சுவையாக சாப்பிடலாம்.
- வடையை பொன்னிறமாக பொரிக்க, சூடான எண்ணெயில் மட்டுமே பொரிக்கவும்.

Latest Videos

vuukle one pixel image
click me!