மணலில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலத்தைப் பெறுகிறது.
வெறுங்கால்களால் மணலில் நடக்கும் போது, அதிக அளவில் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக கூடுதலாக உள்ள உடல் பருமன் குறையும்.
பாதங்களில் இருக்கும் இறந்த சரும அணுக்களை நீக்குவதற்கு, மணல் உதவி புரிகிறது.
பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் நீக்குவதற்கும், மணல் நடைபயிற்சி உதவுகிறது.
மணலில் நடப்பதால், பாதங்களில் இருக்கும் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன் காரணமாக, உடலில் இருக்கும் சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகிறது.
வெறும் கால்களில் மணலில் நடப்பதால், இடுப்புத் தசைகள் பலம் பெறுகிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் நடைபயிற்சி மேற்கொள்வதே அரிதாகி விட்ட நிலையில், வெறுங்காலில் நடப்பதும் கடினமான ஒன்று தான். இருப்பினும், காலணிகள் அணியாமல் நடைபயிற்சி மேற்கொள்வதன் நன்மைகளை அனைவரும் அறிந்து கொண்டால், நிச்சயமாக நடைபயிற்சி மேற்கொள்வார்கள்.