அதில் முதல் கண்டிஷன் தனக்கு பார்க்கப்படும் பெண் நன்கு படித்திருக்க வேண்டும் என்பது தான். காரணம் தன்னால் இளமை காலத்தில் பெரிய அளவில் படிக்க முடியவில்லை என்கின்ற வருத்தம் ரகுமானுக்கு பெரிய அளவில் இருந்திருக்கிறது. இரண்டாவதாக தனக்கு பார்க்கப்பட வேண்டிய பெண், மிகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். மூன்றாவதாக தனக்கு பார்க்கப்படும் பெண் பணிவானவராக, தன்மீது அதீத அன்பு கொண்டவளாக இருக்க வேண்டும் என்று மூன்று கண்டிஷன்களோடு பெண் பார்க்க கூறி இருக்கிறார் ரஹ்மான்.