தெலுங்கு மொழி மூலம் தன்னுடைய திரைப்பட பயணத்தை தொடங்கி, கடந்த 2003ஆம் ஆண்டு தமிழில் வெளியான "எனக்கு 20 உனக்கு 18" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ரேயா சரண். தொடர்ச்சியாக தமிழில் "மழை", "திருவிளையாடல் ஆரம்பம்", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "சிவாஜி", விஜயின் "அழகிய தமிழ் மகன்", "தோரணை" மற்றும் விக்ரமின் "கந்தசாமி" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்த பிறகு கொஞ்ச காலம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட அவர் தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.