ஏ.ஆர் ரகுமான் சாய்ரா பிரிவு; கலக்கத்தில் மகன் அமீன் வெளியிட்ட பதிவு!

By Ansgar R  |  First Published Nov 20, 2024, 12:18 AM IST

A.R Ameen : கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் சிறப்பான திருமண வாழ்க்கைக்கு பிறகு, ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய மனைவி சாய்ராவை பிரிந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களாக பணியாற்றி வந்த ஈமான், ஜிவி பிரகாஷ் போன்றவர்கள் தங்களுடைய துணைவியை பிரிந்த விஷயமே இன்னும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து மறையாமல் இருக்கும் இந்த சூழலில், யாருமே எதிர்பாராத ஒரு விஷயம் இப்பொது நடந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 

தமிழ் சினிமாவை பொருத்தவரை மிக மூத்த இசையமைப்பாளராக, மிகச்சிறந்த மனிதனாக திகழ்ந்து வந்தவர் ஏ.ஆர் ரகுமான், பல மேடைகளில் தன்னுடைய மனைவி மீது உள்ள காதலை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று ரகுமானின் மனைவி சாய்ரா பேகம் தன்னுடைய கணவர் ரகுமானை மிகுந்த மன வருத்தத்தோடு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார். 

Tap to resize

Latest Videos

undefined

முடிவுக்கு வந்த 29 வருட காதல்; ரகுமான் - சாய்ரா பிரிவுக்கு என்ன தான் காரணம்?

இது குறித்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் கடந்த சில மாதங்களாகவே ரகுமான் மற்றும் சாய்ரா இடையே உணர்ச்சி பூர்வமான பல விஷயங்கள் நடந்து வந்ததாகவும். இந்த சூழலில் சாய்ரா கடுமையான ஒரு முடிவை எடுக்க நேரிட்டிருக்கிறது என்றும் ரகுமானை பிரிந்து அவர் வாழ உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

இருப்பினும் இந்த விஷயத்தில் இசைப்புயல் ரகுமானின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995 ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளனர். அதில் ஏற்கனவே மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. 

அதேபோல இந்த தம்பதியின் இளைய மகன் ஏ.ஆர் அமீன் இப்போது இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தமிழ் திரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய தாய் தந்தையின் பிரிவை குறித்த தகவல் வெளியானது அவருக்கு மிகப்பெரிய மனக்கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் தேவையான அந்த தனிமைப்பட்ட நேரத்தை கொடுக்குமாறு தாழ்மையுடன் ஒரு கோரிக்கையை அவர் வெளியிட்டு இருக்கிறார். இதிலிருந்து மீண்டு வர தங்களுக்கு இந்த தனிமை தேவைப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

கல்யாணத்துக்கு 3 கண்டிஷன் போட்ட இசை புயல்; சாய்ரா - ரகுமான் காதல் மலர்ந்தது எப்படி?

click me!