தரவரிசையில் டிரெட்மில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக வேகமாக நடப்பது அல்லது இன்க்ளைன் வாக்கிங் செய்வது பலருக்கும் நீண்ட நேரம் தொடர்ந்து செய்யக்கூடிய உடற்பயிற்சியாக இருக்கிறது.
டிரெட்மிலில் வேகம் மற்றும் சாய்வு அளவை தனிநபரின் உடற்பயிற்சி திறனுக்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்க முடியும். அதிக உடல் எடை கொண்டவர்கள் அல்லது மூட்டு தொடர்பான சிரமம் உள்ளவர்களுக்கு ஓடுவதற்குப் பதிலாக வேக நடை அல்லது சாய்வு நடைப்பயிற்சியைத் தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.