விஜய் டிவி டிஆர்பி-க்கு ஆப்பு வைக்க... மற்றுமொரு பாக்கியலட்சுமி சீரியலை களமிறக்கும் ஜீ தமிழ்

First Published May 24, 2024, 10:23 AM IST

விஜய் டிவி சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், தற்போது டப்பிங் சீரியலை களமிறக்குகிறது ஜீ தமிழ்.

nala damayanthi Serial

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே போல் இந்த சேனலில் தொடக்கத்தில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. 

nala damayanthi Serial stopped

தற்போது டப்பிங் சீரியல்கள் எதுவும் ஒளிபரப்பாகாத நிலையில் ரசிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது டிவி சேனல், அதன்படி வரும் மே 27ந் தேதி திங்கள்கிழமை முதல் மதியம் 3 மணிக்கு ‘நானே வருவேன்’ என்ற டப்பிங் சீரியலும் இரவு 10.30 மணிக்கு லட்சுமி கல்யாணம் என்ற டப்பிங் சீரியலும் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்... பாதியில் நின்ற திருமணம்; பாகுபலி நடிகருடன் லவ் பிரேக் அப்; 40 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத இந்த நடிகை யார்?

Pyar Ka Pehla Naam serial

நானே வருவேன் சீரியல் இந்தியில் Pyar Ka Pehla Naam என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும், இதில் ஷபீர் நாயகனாக நடிக்க நிஹாரிகா ராய் நாயகியாக நடித்துள்ளார். இந்த சீரியல் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 700 எபிசோடுகளை தாண்டி வெற்றிநடை போட்டு வரும் இந்த சீரியலை தான் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப உள்ளனர்.

bhagya lakshmi serial

அதே இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள லட்சுமி கல்யாணம் சீரியல் ஹிந்தியில் பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும். இதில் ரோஹித் சுசாந்தி நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா கரே நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் திங்கள் முதல் இந்த இரண்டு சீரியல்களையும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி படத்தில் இணையும் 3வது ஹீரோயின்... அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள அந்த நடிகை யார் தெரியுமா?

Latest Videos

click me!