Erode GaneshaMoorthy: திமுக டூ மதிமுக.. யார் இந்த கணேசமூர்த்தி? வைகோவுக்காக இவ்வளவு செய்து இருக்காரா?

First Published Mar 28, 2024, 7:32 AM IST

மதிமுகவின் பொருளாளராகவும், வைகோவின் வலது கரமாகவும் அறியப்பட்ட ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி மாரடைப்பால் இன்று அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Ganesa Moorthy

திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் தான் கணேசமூர்த்தி. 1984ல் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியது. அதன்பின், படிப்படியாக அவரது செல்வாக்கு உயர்ந்த நிலையில் 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

Vaiko

இதனையடுத்து கருணாநிதி -  வைகோ இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் 31 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவாக வெளியேறிய, 9 மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். இவர்கள் ஒருங்கிணைந்து 1994ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்கள். 

Erode MDMK MP Ganeshamoorthy

மதிமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர்,  2016ம் ஆண்டில் மதிமுக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். 1998ஆம் ஆண்டு மக்களவைத் பொதுத்தேர்தலில் பழநி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து  2009, 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதையும் படிங்க: #BREAKING: தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பெற்று வந்த மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி மாரடைப்பால் உயிரிழப்பு!

MDMK Ganesa Moorthy

இந்நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் ஒரு தொகுதியில் துரை வைகோவும், மற்றொரு தொகுதியில் தானும் போட்டியிடலாம் என திட்டமிட்டிருந்தார். ஆனால், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுகவுக்கு திருச்சி தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் துரை வைகோ போட்டியிட உள்ளார். 

Ganesha Moorthy Passed Away

இதனால், மனஉளைச்சலில் இருந்த கணசேமூர்த்தி  கடந்த 24ம் அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு வைகோவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!