#BREAKING: தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பெற்று வந்த மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி மாரடைப்பால் உயிரிழப்பு!
மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் கணேசமூர்த்தி. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.பியாக உள்ளார்.
மார்ச் 24ம் தேதி தற்கொலைக்கு முயன்று கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் கணேசமூர்த்தி. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.பியாக உள்ளார்.
தற்போது நடைபெறவுள்ள 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தன்னை மீண்டும் வேட்பாளராக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் சீட் கிடைக்காத விரக்தியில் கடந்த 24ம் அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணேசமூர்த்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது உயிரிழப்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.