RAIN : குட் நியூஸ்.. வெப்பம் குறையும்.. இடி, மின்னலோடு தமிழகத்தில் கன மழை.! எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.?

First Published | May 6, 2024, 1:38 PM IST

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியு நிலையில், ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. இந்தநிலையில் அடுத்து ஒரு சில நாட்களுக்கு பலத்த காற்றோடு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

heat wave

அதிகபட்ச வெப்பநிலை : 

தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் மற்றும் மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

Heat wave

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசியது

அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5° செல்சியஸ் (இயல்பை விட +6.7° செல்சியஸ் அதிகம்) மற்றும்  ஈரோட்டில் 43.4° செல்சியஸ் (இயல்பை விட +5.3° செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 43.2° செல்சியஸ், திருச்சியில் 42.1° செல்சியஸ், திருப்பத்தூரில்  41.8° செல்சியஸ், திருத்தணியில் 41.4° செல்சியஸ்,  தர்மபுரியில் 41.2° செல்சியஸ்,   மதுரையில்  (விமான நிலையம்) 41.1° செல்சியஸ், மதுரையில் (நகரம்) 41.0° செல்சியஸ், பாளையம்கோட்டையில் 40.6° செல்சியஸ், நாமக்கல்லில் 40.5° செல்சியஸ், சேலத்தில் 40.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
 

Latest Videos


 ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை

 தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 05.05.2024 மற்றும் 06.05.2024:  தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

07.05.2024: தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இடி, மின்னலோடு மழை

08.05.2024: தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 

ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

05.05.2024 &  06.05.2024: அடுத்த 2 தினங்களுக்கு தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய  மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 07.05.2024 முதல் 09.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச  வெப்பநிலை  2° செல்சியஸ் வரை படிப்படியாக  குறையக்கூடும். 

05.05.2024 முதல் 09.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  05.05.2024 & 06.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில்  அதிகபட்ச வெப்பநிலை 3°-5°  செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

Tamil Nadu Rain Update

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

06.05.2024 முதல் 07.05.2024 வரை: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!