Jagannath Rath Yatra 2022 பூரி ஜெகநாதர் கோவிலின் ரகசியம்? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மர்ம முடிச்சுகள்!

First Published Jun 27, 2022, 4:52 PM IST

Puri Jagannath Rath Yatra 2022...பூரி ஜெகநாதர்  தேர் திருவிழா: ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கும் தனி சிறப்பு உள்ளது. மற்ற கோவில்களில் இல்லாத அதிசயங்கள் இந்த கோவிலில் தினம் தோறும் நடந்து வருகிறதாம்..? அவை என்னென்னெ அதிசயங்கள் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 

Puri Jagannath Rath Yatra 2022

ஒவ்வொரு கோவிலுக்கும் எதாவது மர்மங்கள் தனி சிறப்புகள் மற்றும் மர்மங்கள் அடங்கி இருக்கும். அந்த வகையில், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கும் தனி சிறப்பு உள்ளது. ஆம், அதில் ஒன்றாக மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல், ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலை புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். மேலும், என்னென்னெ அதிசயங்கள் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 
 

Puri Jagannath Rath Yatra 2022

12 ஆண்டுகளுக்கு பிறகு, வருகிற ஜூலை 1 ஆம் தேதி தேர் திருவிழா ஆரம்பமாகிறது. 42 நாட்கள் நடக்கும் இந்த உற்சாக விழாவில், கோயிலுக்குச் செல்வது சுபமாக கருதப்படுகிறது. நீண்ட நாள் இருந்து பிரச்சனைகளை விலகுமாம். தீராத வினையெல்லாம் தீருமாம். 

மேலும் படிக்க....Jegannath Temple: களைகட்டும் ஜெகன்னாதர் கோவில் தேர் திருவிழா...நேரம், தேதி எப்போது..? முழு விவரம் உள்ளே...

Puri Jagannath Rath Yatra 2022

யாரால் கட்டப்பட்டது..?

ஒடிசாவின் தலைநகரமான புவனேஷ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சோழ மன்னன் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் கட்டப்பட்டது. இந்த கோவில்  ஆலயத்தில் ஜகன்னாதர், தேவி சுபத்ரா மற்றும் பாலபத்திரர் ஆகிய  மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர். 

Puri Jagannath Rath Yatra 2022

இந்த கோயிலின் கருவூல அறையில் ஜெகநாதருக்கு அலங்காரம் செய்யும் ஆபரணங்கள் மற்றும் பக்தர்கள் செலுத்திய தங்க, வைர நகைகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தேர்த் திருவிழாவின் போது பூரி மன்னர் பரம்பரையினர் தங்கத் துடைப்பத்தைக் கொண்டு தெருவை சுத்தம் செய்வார்களாம், அந்த அளவிற்கு தங்கமும், வைரமும் கொட்டி கிடைக்குமாம்.

மேலும் படிக்க....Jegannath Temple: களைகட்டும் ஜெகன்னாதர் கோவில் தேர் திருவிழா...நேரம், தேதி எப்போது..? முழு விவரம் உள்ளே...

Puri Jagannath Rath Yatra 2022

12 வருசத்துக்கு ஒரு முறை நடைபெறும் நவகளேபரா திருவிழாவுக்கு ஒவ்வொரு முறையும் புதிய சிலைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுமாம். கோடை காலத்தில் சூரியன் வெயில் சுட்டெரித்தாலும், இந்த கோயில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை. கோபுரத்தின் நிழலை பார்க்கவே முடியாதம்.

Puri Jagannath Rath Yatra 2022

அதுமட்டுமின்றி,  கடற்கரை அருகில் இருக்கும் கோயிலின் உள் சென்றால் கடடலை கூட கேட்பதில்லையாம். விஷ்ணு பகவான் காலையில் ராமேஸ்வரம் சென்றுவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு இங்கு வருவதாக ஐதீகம் உள்ளதாம். அதனால் இங்கு விருந்து தடபுடலாக நடக்கும். எவ்வளவு சாப்பாடு செய்தாலும், துளியளவும் வீணாவதில்லையாம். 

மேலும் படிக்க....Jegannath Temple: களைகட்டும் ஜெகன்னாதர் கோவில் தேர் திருவிழா...நேரம், தேதி எப்போது..? முழு விவரம் உள்ளே...

Puri Jagannath Rath Yatra 2022

உணவு சமைக்கப்படும் போது, ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு இருக்கும். கீழே இருக்கும் பாத்திரத்தின் உணவு வேகுவதற்கு முன்பாகவே, மேலே பாத்திரத்தில் இருக்கும் உணவு வெந்துவிடுவாம். எங்காவது நீங்கள் இப்படி பட்ட அதிசயங்களை பார்த்தது உண்டா..? இப்படி பல அதிசயங்களை உள்ளடக்கியதால் தான் இன்றளவும் ஜெகநாதர் கோவில் சிறந்து விளங்கி வருகின்றது.

click me!