Vishal : ரத்னம் படத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து... நீதியால் உங்களை வெல்வேன் என நடிகர் விஷால் சவால்

First Published Apr 26, 2024, 8:46 AM IST

ரத்னம் படத்தை வெளியிட விடாமல் தடுக்க கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக நடிகர் விஷால் தன்னுடைய எக்ஸ் தளம் வாயிலாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மார்க் ஆண்டனி படத்தின் மாஸ் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஷால் நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இயக்குனர் ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கலந்து பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கு ரத்னம் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நடிகர் விஷால் இப்படத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது : “இறுதியாக கட்டப்பஞ்சாயத்து எந்தவித பயமும், வருத்தமும் இன்றி நடந்துகொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கும் தமிழ் சினிமாவில் உள்ள குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்களுக்கு இந்த ஆண்டு ஒரு ரோலர் கோஸ்டர் ரைடாக அமையும் போல தெரிகிறது. தியேட்டர் அசோசியஷன் உறுப்பினர்களே, இன்னும் கங்காரு நீதிமன்றங்கள் இருக்கிறது, இனியும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

இதையும் படியுங்கள்... Amaran: உன்னை கண்டு பெருமை கொள்கிறது இந்தியா! முகுந்த் வரதராஜன் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ!

ஆனால் என்னைப் போன்ற ஒரு போராளிக்கு முன் இதெல்லாம் எடுபடாது. தாமதம் ஆனாலும் பரவாயில்லை, கண்டிப்பாக நீதியால் உங்களை வெல்வேன். எல்லா தயாரிப்பாளர்களுக்கு குடும்பம் இருக்கிறது என நம்புபவன் நான், அவர்கள் ஒன்றும் பொழுதுபோக்குக்காக படம் எடுக்கவில்லை. வெவ்வேறு பிரிவுகளாக இருக்கும் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு நன்றி. நீங்கள் ஏன் இத்தனை பிரிவுகளாக இருக்கிறீர்கள் என்பது கடவுளுக்கு தான் தெரியும்.

இது உங்களுக்கு தான் அவமானம். ஒரு பொதுச்செயலாளராகவோ, நடிகராவோ அல்லது தயாரிப்பாளராகவோ அல்ல, முன்னாள் தயாரிப்பாளரின் மகனாக தன் குழந்தையை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குள் வியாழக்கிழமை மாலை என்ன நடந்தது என்று தெரியும் என காட்டமாக பதிவிட்டுள்ளார் விஷால். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் எந்த படம் எப்போ ரிலீஸ் ஆக வேண்டும் என முடிவு செய்வதாக கூறி நடிகர் விஷால் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், தற்போது கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக கூறி இருப்பது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... Shruti Haasan Breakup: புகைப்படங்களை நீக்கி... சாந்தனுவுடனான பிரேக்கப்பை உறுதி செய்தாரா ஸ்ருதிஹாசன்?

click me!