கமல்ஹாசன் கழட்டிவிட்ட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்... ஒருவழியாக தனது கடைசி பட இயக்குனரை லாக் செய்த தளபதி

First Published Mar 12, 2024, 8:39 AM IST

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வரும் விஜய், தன்னுடைய கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை பிரபல இயக்குனருக்கு வழங்கி இருக்கிறாராம்.

Thalapathy Vijay

நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகர் விஜய் உடன் சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Vijay Last Movie

கோட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள படம் தளபதி 69. இப்படத்தை பற்றிய அப்டேட்டுகளும் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. ஏனெனில் இதுதான் நடிகர் விஜய் நடிக்க உள்ள கடைசி படமாகும். தளபதி 69 படத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துவிட்டார் விஜய். அதன்பின் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால் நடிப்புக்கு முழுக்கு போட முடிவெடுத்து உள்ளார் விஜய். இதனால் அப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசனை தொடர்ந்து.. நடிகர் சங்க கட்டிட பணிக்கு ரூ.1 கோடியை அள்ளிக்கொடுத்த தளபதி விஜய்!

H vinoth, Vijay

விஜய்யின் கடைசி படமான தளபதி 69-ஐ டிவிவி தனய்யா தயாரிக்க உள்ளார். இப்படத்தின் இயக்குனர் யார் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இந்த பட்டியலில் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், அட்லீ போன்றோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக அந்த பொன்னான வாய்ப்பை தட்டிதூக்கியது யார் என்கிற சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

Thalapathy 69 Director H vinoth

அதன்படி தளபதி 69 படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் தான் இயக்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். இதற்காக கமல்ஹாசனிடம் இருந்து தடையில்லா சான்றும் அவர் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. கமலின் ராஜ்கமல் நிறுவனத்துக்காக ஹெச்.வினோத் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. கடைசில் கதையில் திருப்தி இல்லாததால் கமல் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது அந்த கதையை பட்டி டிங்கரிங் பார்த்து தான் விஜய்க்கு சொல்லி ஓகே வாங்கி இருக்கிறாராம் ஹெச்.வினோத். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பட்ஜெட் 5 கோடி.. ஆனால் வசூல்? பல மடங்கு லாபத்துடன் மாஸ் காட்டும் Manjummel Boys - லாபம் எத்தனை கோடி ஹெரியுமா?

click me!